வாழ்க்கை - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

வாழ்க்கை

உலகில் முளைத்த விதையாய் பிறந்தோம்
மங்கா சூரியனாய் மழலையாய் இருந்தோம்
சின்னஞ்சிறு சேட்டையும் சிணுங்கும் சிறுவனாய்
இன்னல் அற்றவனாய் மகிழ்ச்சியுடயவனாய்
திறன் கொண்ட இளைஞனாக வாழ்ந்து
 சந்தர்ப்பங்களை பயன்படுத்தும் மனிதனாகவும்
நம்மிடமிருந்து சந்தர்ப்பங்களை தட்டிப்பறிக்கும் மனிதர்களையும் கடந்து
வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டுமென முடிவெடுக்கும் குடும்ப தலைவனாகவும் தலைவியாக இருந்து
இளமையில் சாதிக்க வேண்டுமென நினைத்ததை
அதற்கென முயற்சி எடுக்காமலும் வாழ்க்கை வட்டம் என கூறும் முதியவர்களை மாறி விட்டோம் நாம்
பிறக்கும் போது அம்மா என அழத் தொடங்கும் நாம்
இறக்கும்போது அழுவது வாழ்க்கையை வாழவில்லையே என்று ..
வாழ்வை நமக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்கிறோம் .
இருக்கும் காலத்தில் எதிர்காலத்தைப் பற்றி நினைத்து
நேரத்தை வீணடிக்கிறோம்
செல்வமென ஓடித் திரியும் நமக்கு
ஏன் புரியவில்லை இது அனைத்தும் ஆறடி பள்ளத்துக்குள் என்று 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close