தாய் (அம்மா) - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

புதன், 15 மே, 2019

தாய் (அம்மா)

அண்டமே தாங்க முடியாத அளவுக்கு துயரம் கண்டு
ஆதவன் கலங்கும் அளவுக்கு என்னை உருவெடுத்தவளே
அந்த இறைவனே உள்ளங்கையில் என என்னை உன் கையில் ஏந்தி பேருவகை கொண்டவளே
உன் உணவும் என் உணவாகிட
பிள்ளைக்கு என்று பெருமூச்சடைந்தவபவள் நீயே
நான் அடையும் துன்பம் கண்டு  நீ
எனக்காக கண்ணீரால்
தேற்றும் தெய்வத்தின் மறுஉருவே
நான் வளர்ந்து உன்னை ஒதுக்கினாலும் பிள்ளை
என்னைப் பற்றியே நீ எண்ணினாய்
ஆயிரம் துப்பாக்கிகளும் என்முன் இருந்து எனக்கு அரண் கொடுத்தாலும்
என் தாய் எனக்கு கொடுக்கும்
அரண் ஆள பெரிது !
ஆயிரம் சுக அறைகளில் நான் துயில் கொண்டாலும்
நாள் மீண்டும் துயில் கொள்ள முடியாத ஒரே அறை
 என் தாயின் கருவறை !! அம்மா
அந்தக் கருவறையும் இன்று
எனக்கு தருகிறாய்
உன் அன்பின் வடிவிலே அம்மா
உன் மடியில் மீண்டும் தவழ நினைக்கிறேன் குழந்தையாய்
குழந்தையாய் தவள நான் இருக்கிறேன் ஆனால்
நீ எங்கே அம்மா
செல்வம் என்று ஓடி திரியும்போது
உன் அன்பு எனக்கு புரியவில்லை
இன்று செல்வம் இருக்கிறது
அன்பு காட்ட
ஆள் இல்லையே அம்மா
பணம் இருந்தும் பிணமாக நடக்கிறேன் அம்மா! !!
 நீ இல்லாமல் தவியாய் தவிக்கிறேன் அம்மா! !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close