காதல் தோல்வி - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வெள்ளி, 31 மே, 2019

காதல் தோல்வி

உன் இரு விழிகளும் என்இரு விழிகளுக்குள் இருக்க
உன்னை மறக்க முடியாமல் என்
விழியில் இருந்து கண்ணீரை பரிசாகத் தருகிறது கண்மணியே
என் இதயத்தை கிழித்து விட்ட நிலையிலும் அந்த கிழிந்த இதயம் கூட உன்னையே சுற்றி வருகிறது கண்மணியே
 நீ என்னை வேண்டாம் என்ற போதிலும் என் இதயம்
 நீ வேண்டுமென்கின்றதே
அடி கண்ணே
 இவ்வுலகத்தில் அனைவரும் இருந்தும் அண்டமே இருண்டதுபோல்
யாரும் இல்லாத தனிமையை உணர்கிறேன் பெண்மணியே !

ஒவ்வொரு நிமிடமும் உன்னை எண்ணி யாரோ என்னை ஈட்டியால்
குத்துவது போல் துன்புறுகிறேன்
அது ஏனடி பெண்ணே?
என் காதலியே!
" உன்னோடு நானிருந்த மணித்துளிகள் சிறுபொழுது என்றாலும் உன்னைப்பற்றி நான் ஏங்கி துன்பப்படும் மணித்துளிகள் பெரும்பொழுது ஆகிவிட்டன
என் இதயத்திலிருந்து சிந்தும் ரத்தத்துளிகள் கூட உன் பெயரை கூறிக் கொண்டே இருக்கும் கண்மணியே
என் மரண படுக்கையிலும் கூட உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன் கண்மணியே
என்றாவது என்னை ஒரு நாள் புரிந்து கொள்வாய் என்று .............!!!!"""""



2 கருத்துகள்:

close