பெண்கள் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

சனி, 1 ஜூன், 2019

பெண்கள்

"மின்னலை தன்வசமாக்கி வானமே அஞ்சும் அளவிற்கு அழகாக பிறந்த எழில் மங்கை இவள் !
விழி திறந்தாள் விண்ணையை தன் விழிக்குள் வைத்திருக்கும்
 வீரமங்கை இவள்
 குழந்தையாய் தவழும்போது குறும்புத்தனம் பிடித்த குட்டிச்செல்லம் இவள்!
 பள்ளி செல்கையிலே பண்பாக பேசும் அடுத்த தெரசாள் இவள் !
பருவம் வருகையிலே பூத்துக்குலுங்கும் பூ மகள் இவள் !
அமுதத்தினை காட்டிலும் இவள் காட்டும் அன்பு தித்திப்பானது
உறவினரை விட்டு புகுந்த வீடு செல்லயிலே மாற்றத்திற்கே மாற்றத்தைக் கொண்டுவரும் மறுமலர்ச்சி நிறைந்த மங்கையிவள்!
தாய்மை என்ற நிலையினை அடைந்து தங்கத்தைவிட பேருஉவகையில் ஜொலிக்கும் தங்கமகள் இவள்  !
பிள்ளைகளுக்காகவே வாழும் பிஞ்சு இதயம் கொண்ட தியாக மகளிர் இவள் !
பிள்ளை திட்டினாலும் பிள்ளையின்துன்பத்திற்காக கண்ணீர்வடிக்கும் கண்மணி இவள்!
மூன்று காலில் நடக்கும்
 முதியளாகிய பின்
 உடலில் வலு விழுந்தாலும்
மார்பிலே பேரன் பேத்திகளை சுமக்கும் வழுகொண்ட மரகதம் இவள்  !
சதுரம் நாட்டியம் இட்டாலும் தன் ஆறுதல் மொழிகளால் மனதையும் நாட்டியமாட செய்பவள் இவள் !
இறுதியிலே உதவியை மட்டுமே நாடிஇருக்கும் மூத்த குழந்தை இவள்
இவை அனைத்தும் தன் வாழ்வில் அனுபவிக்கின்ற இறைவனின் இன்னொரு அதிசயம் தான் தெய்வத்தின் வடிவிலான மேன்மை பொருந்திய மங்கையர்கள் !!!!"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close