விண்ணையும் வியந்து
பார்க்க காரணமானவர்கள்
புற்செடிகளையும் தன் புன்னகையால்
பூக்க வைக்கும்
பூமலை செம்மல்கள் இவர்கள்
அன்பின் வடிவமான
அன்னைக்கும் அமுதமான அன்னத்தை
அமுது படைக்கவல்லவர்கள்
பொங்கும் எரிமலையினையும்
பேரோலியாய் முழங்கும் இடியினையும்
வித்தையின் விடியலையும்
தன் வியர்வால் வியந்து
பார்க்க வைப்பவர்கள்
அவர்கள் அடையும் துன்பம் கண்டு
அந்த ஆகாயமும்,
கண்ணீரால் ஆறுதல் கூறும்
ஓ மனிதா!
தன் சாயமே போகுமளவுக்கு
சாகும்வரை அன்னத்தை
படைக்கும் பாமர வீரர்கள்
சாயமேற்றிய ஆடைகளை
அணியும் நமக்கு,
புரியவில்லை அவர்களின் சாயம்
மங்கினால்தான் நம் கையில்,
உள்ள உணவில் நம் பெயர் என்று
விழித்து எழு மனிதா!
விவசாயத்தினையும் விவசாயிகளையும்
காத்திட வீறுகொண்டு வா தமிழா!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக