ஆதவன் மறைவதை கண்டேன்
உன் துடிப்பிலே!
புத்தகங்கள் பொறாமைப்படுவதை கண்டேன்
உங்கள் அறிவிலே!
அன்னையோ கை பிடித்து நடக்க சொல்லி கொடுத்தாள்
நீரோ அன்னையான தமிழை எப்படி கையில் அடக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாய்
செவ்விதழ் வானமும்
வெட்கத்தில் சிரிக்க;
செந்தாமரையும் சோகத்தில் மலர்க்க;
உங்கள் வாய்மொழி வார்த்தைகளால்
எங்கள் அறிவினை சிறக்க செய்தாய்;
விண்மீன்களும் விடிவெள்ளியாய் மாறட்டும்!
நீங்கள் கற்பிக்கும் விந்தையை கண்டு
இரவுகளும் பகலாக மாறட்டும்
நீங்கள் என்றும் மாணவனாக இருப்பதைக் கண்டு;
என்றும் மாணவர்களோடு இருக்க விரும்புபவர்கள்!
சமுதாயத்தின் சிற்பிகளால் இருப்பவர்கள்
மண்ணில் விழுந்த விதைகளாய் விதைத்தவர்கள்!
தாகம் அடிக்கா தண்ணீராய் என்றும் தவிப்பவர்கள்!
உலகில் உள்ள அனைவரும் ஒருவரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்பட
ஒருவர் மட்டும் அந்த வளர்ச்சியைக் கண்டு பேருவகை கொள்வார்
அந்த உவகையில் துடிக்கும் நெஞ்சமாகவும் ;
பேரொளியாய் மின்னும் மின்னலாகவும்
என்றும் ஜொலிக்கும் தங்கமாகவும் இருப்பவர்கள் இவர்கள்!
இவர்களின் இதய சுடரை கண்டு அந்த சுட்டெரிக்கும் சூரியனுக்கும் கூட
குளிரால் அவதிப்படும்;
இவர்களுக்கு ..........!
மாணவர்கள் சுட்டி குழந்தைகள் !
அப்படிப்பட்ட குழந்தைகளை கற்பித்து சிற்பிகளாக மாற்றும் மரகதம் இவர்கள்!
அப்படி இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த மரகதம் என்னும் மாணிக்கங்கள் தான்
கண்டிப்புடன் அன்பை கொடுக்கும் ஆசிரியர்கள்!
👌👌👌👌👌👌👌👌....
பதிலளிநீக்குExcellent
பதிலளிநீக்குExcellent 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏
பதிலளிநீக்குT.q
நீக்குT.q
நீக்கு