விடுதி வாழ்க்கை - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

திங்கள், 23 டிசம்பர், 2019

விடுதி வாழ்க்கை

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
ஒரே குடும்பமாய்
வாழ்கின்றோம் விடுதியிலே;        சூரியன்உதிக்கிறது தினமும்
பூமியை நோக்கி-அதுபோல
எங்களின் எண்ணமும் உயர்கிறது
எங்களின் வீட்டைநோக்கி;
கண்ணீருடன் காலையில் எழுந்து,
அவசர அவசரமாக 
மணி அடிக்கும் முன் குளித்து,
கசப்பான காலை உணவும்,
கண்ணீர்த்துளிகளால் இனித்திடும்!
விடுதியின் சுவர்களும் விதிமுறைகளும் என் சுதந்திரத்தை பறித்து விட;
எண்ணி தட்டிக்கொடுக்க 
நண்பர்கள் கிடைத்திட;
அதுவும் எனக்கு புதுவிதமாய் மாறிட!"
அப்பொழுதுதான் தெரிந்தது"
என் சுதந்திரம் பறிபோகவில்லை..என்று
அது என் நண்பர்கள் வடிவில் என்றும் என்னோடு இருக்கிறது என்று;"
சில கசப்பான அனுபவங்களும் 
வாழ்க்கையை மாற்றும் தருணங்களாய் மாறிட; 
சில மறக்க முடியாதநிகழ்வுகள் வாழ்வில் மாறாத
 நினைவுகளாய் தங்கிட;
வழிசெய்வதும் இங்கேயே தான்;
இரவு படிப்பும் இனிப்புப்பண்டங்களான படிப்பாக மாறுவதும் ,
அறையில் யாரும் இல்லாத வேளையில் தனியாகதின்பண்டங்களை 
தின்னும் வேளையில் நண்பர்கள் வந்து
மொத்தமாகஅப்பித்தின்னும்
சிரிக்கக் கூடிய சம்பவங்களும்
 நடப்பதும் இங்கேயே தான்;
நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அதுதான் காரணமென,      விடுப்பு போட்டு அவனை சீண்டும் 
சில கிறுக்குத்தனமான நிகழ்வுகள் நடப்பதும் இங்கேதான்;
விடுதியில் இருக்கும் போது விருப்பமே இல்லாமல் கவலையுடன் தங்குவோம்;
ஆனால் விடுதியை விட்டு பிரிகையிலே! விருப்பமே இல்லாமல் தாங்க முடியாது துயருடன் இணைபிரியா தோழர்களுக்கும் பிரியாமல் பிரியாவிடை கொடுப்போம்;
விடைதெரியாமல் ‌விடைதேடிக்கொண்டே?........... இறுதியில்
 மனதில் விதையாய் மாறிவிட்டதே ! இந்த விடுதியின்வாழ்க்கை







4 கருத்துகள்:

close