அப்பா - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

செவ்வாய், 14 ஜனவரி, 2020

அப்பா

கட்டி தலுவுகின்ற வியர்வை துளிகளும்
கண்ணைப் பறிக்கும் முத்துக்களாய்
மாறும் உன்னிடமே;
ஆயிரம் சுமையை நெஞ்சில் கொண்டு ஐம்பொன்னாலான பிள்ளையை கண்ணில் கண்டு
துச்சமென சுமைகளை தூசி தட்டும் தன்மையும் உன்னிடமே!
தாயின் இடத்தை தாரத்துக்கு தாரை வார்த்து தன்னிடமிருந்து நானிலம் புகுத்திட புது மலராய் காத்து
பிள்ளைகளே உன் உலகம் என
 அந்த உலகத்திற்குகாகவே வாழ்ந்தாய்
அந்த உலகத்தின் சிரிப்பினால் வெள்ளத்தில் தத்தளிப்பதும் நீயே!
அப்பா என்று பிள்ளை கூப்பிடும்போது
அந்த அன்பிற்கு மயங்கி
தன் துன்பங்களை கணத்தில்மறந்து
மகிழ்ச்சியில் முழ்கி
 தத்தளிப்பதும் நீயே  !
அப்பா .............!
உன்னை  என் நெஞ்சில் கொண்டு
என்னை நீ
உன் மனதில் கண்டு
கண்ணீர் துளிகளால் வாழ்த்த
என்னை நீ அரவணைக்ககண்டு ;
அந்த சூரியனும் கண்ணீர் விடுகிறது
உன் பாசத்தினால்..
இளமையில் நான் உன்னை புரிந்து கொள்ளவில்லை இன்று
நான் உன்னை புரிந்து கொள்ளும் நிலையில் நீ என் பக்கத்தில் இல்லை
உன் பிரிவால்  தவிக்கிறேன்
உயிரற்ற பிணமாய் நடக்கிறேன்
சொல்ல முடியா
துயருடன் முடிக்கிறேன் இம் மூன்று புள்ளிகளுடன் ......







1 கருத்து:

close