பொங்கல் (தமிழர் திருநாள்) - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

செவ்வாய், 14 ஜனவரி, 2020

பொங்கல் (தமிழர் திருநாள்)

தை மாத திருநாளாம்;
  தமிழர் பெருநாளாம்
உலகில் தமிழன் முத்திரை
  பதித்த  நன்னாலாம்!
விடியல் தரும் வியர்வையும் "
   விவசாயத்தின் மெய்மையும்
 விண்மீன்கள் பறைசாற்றி மேகங்கள்
    இடிகளால் கைத்தட்டடும்,
தித்திக்கும் கரும்பினை தின்று
   தித்திக்கா வீர விளையாட்டும்
எங்கள் மரபினை உலகிற்கு
   எடுத்துக் கூறும்......
மாவிலை தோரணம் கட்டி
   மண்பாண்டத் தால் புத்தரிசியும்
 புத்தாடை கட்டி கொண்டாடும்...

விண்மகள் வீட்டில் தங்கிட
    பூமகள் வாழ்த்து கூறட்டும்:
அறியாமை நீங்கி அறிவுஒளி வளர !
    மதம்  விலகி சமத்துவம் வளர!
கலவரம் நீங்கி அமைதி நிலவ!
    வறுமை நீங்கி செழிப்பு பொங்க!
இருள் நீங்கி ஒளி பொங்க ;
     வாழ்வில் அனைத்தும் பொங்க,
பொங்கலோ பொங்கல் என
       மனது பொங்கி வழியட்டும்
 இந்த பொங்கல் திருநாளிலே......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close