இராணுவ வீரர்கள் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

சனி, 15 பிப்ரவரி, 2020

இராணுவ வீரர்கள்

விடியலை காணும் முன்னே வீதியிலே நிற்போம்;
வசந்தம் காண வாழ்வை அர்ப்பணித்தோம் எங்கோ பிறந்து
ஒன்றாய் குடும்பமாய் வாழ்ந்தோம்!
குடும்பத்தின் நினைவுகள் வருகையிலே புகைப்படத்தினை பார்த்து
கண்ணீர் வடித்து ஏங்கிய தருணங்களும் நாட்டுக்காக...!
ரோந்து பணியில் எதிரி நாட்டு வீரரும் நண்பனாய் மாறிட
 எல்லைக்காக சண்டையில் அவனோடு
சண்டையிட மனம்
வெம்பி அழுது  விட;
எதிரிநாட்டு நண்பனும்
எதிரில் பிணமாய் கிடைத்திட
இருக்கும் உயிரும் இல்லாததுபோல் தனிமையில் தவித்த
தருணங்களும் நாட்டு மக்களுக்காக!
குறை வேளை உணவு
குறையாத இரைச்சல்
குற்ற உணர்வுடன் கையிலே
 துப்பாக்கியும் எங்களைப் பார்த்து
கண்ணீர் வடிக்கும்....ஆதரவாக!
உற்ற தோழணுடன் பேசி
மகிழும் வெளியிலே எப்பொழுது
என்னநடக்கும் என தெரியாத
 பதற்றம் கொண்ட மகிழ்ச்சியும்
 நிலையற்ற மகிழ்ச்சியாகவே
 இருக்கும் எங்களிடமே......
மனைவியை காணப் போகயிலே
 போகுவது நாங்கள் மட்டுமல்ல
 எங்களின் உயிரும் கூட....
மனைவி கதவை ஆர்வமாய்
 திறக்க தீராத காதலன்
தீர்க்கமாய் உறங்குவதை கண்டு
தீராத துயிருடன் கண்ணீர் வடிப்பதும்
சில வீர இரத்தம் சிந்துவதும்
நாட்டுக்காக!
சூரியனை காணும் முன்னே
 சூரியனாய் வாழுகின்றோம்
விடியலை காணும் முன்னே
 மண்ணாய் மாறும்
 ராணுவ
வீரர்கள் நாங்கள்
என்றும் நாட்டுக்காக !
உயிர்விடும் சிங்கங்கள் நாங்கள்........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close