வேடிக்கை மனிதன் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

செவ்வாய், 31 மார்ச், 2020

வேடிக்கை மனிதன்

நாகரீக மனிதனாம்!
 நவநாகரிக உலகில் தலைவனாம்!
வேலை தேடி திரிபவனாம் 
வாழ்க்கை முழுவதும் ஓடுபவனாம்!
தென்றலை மறந்தவனாம் 
அது தரும் கொடையை
 காசுக்கு விற்றவனாம்....
குடும்பத்தை தொலைத்தவனாம்
இயந்திரமாய் வாழ்பவனாம்
அமுதம் தரும் சுவையினை 
சுவைக்க தெரியாத 
ஓர் உயிரினமாய்
ஓடும் நாரீக மனிதா!
வீதியிலே நிற்பவனை பார்த்து வேடிக்கையாக குறைசொல்லும்
செல்வம் என்று தெரிவதால் 
உனக்கு அவன் வறுமை தெரியவில்லை மனித தன்மை இல்லாததால்
 அண்டை வீட்டார் யார்என்று
 தேடும் நீ
உன் வீட்டில் யார் இருக்கிறார்
என்று திரும்பி பார்
உன் வீட்டில் இருக்கும் பணமும்;
 ஆடம்பரமான பொருளும்,
 அதை சுரண்ட வந்த சில
 போலி உறவுகளும்;
 உன்னை கொஞ்சி தழுவிடும்!
ஆனால், உன் குடும்பம்
உன்னிடம் இருக்காது! 
உன்னையே தொலைத்த நீ !
செல்வத்தை தேடுகிறாய் 
உன் பிணக்குழியில் நிரப்புவதற்கு!
தங்கமயில் தொகையினை போல்
 தாயின் அரவணைப்பை இழந்த நீ !
அமிழ்தத்தை விட 
சுவையான அன்பைப் பொழியும் 
தாரத்தை மறந்தாய்
பேருவகை தரும் பிள்ளைச் செல்வத்தையும் உதறிய நீ
 மறையும் சூரியன் போல் 
மங்கலான ஒளியாய்
 வேடிக்கை மனிதனாய்
 மரணத்தை கட்டித் தழுவுகிறாய்
உன் கண்ணிலிருந்து வழியும் இரத்தக்கண்ணீரால்...........



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close