நண்பனுக்கு தீஞ்சுடர் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வெள்ளி, 15 மே, 2020

நண்பனுக்கு தீஞ்சுடர்

        நண்பனுக்கு தீஞ்சுடர்
பூவிதழ் மொட்டும் பூப்பரிக்கின்றன
பூவேயான நீ!
என் தோழனாக வந்ததற்கு
விழியும் சோகத்தால்
கண்ணீரை பரிசளிக்கும் வேலையிலும்
விண்ணும் என் கையிலென
வேடிக்கையாக ஆறுதலை
பரிசளிப்பதைப் பார்த்த
அந்த ஆகாயமும் அன்பின்மிகுதியால்
 ஆனந்த மாரி பொழியும்!
தீஞ்சுடர் மகிழ்ச்சியும்
 தித்திக்கும் அனுபவமும்
குழந்தையாய் மாறி தவழ்கிறது
என் மனதுக்குள்ளே!
செவ்விதழ் தேனும் கசப்பாகிட
 செங்கடல் நீரும்
 சுவை அற்றதாய் மாறிட
உன் நினைப்பில் தவிக்கிறேன்
உயிரற்ற சடமாய் இருக்கிறேன்
உன்னை காணாமலே
என்றும் நம் நட்பு
எக்காளம் போல் ஓங்கிட
நந்தவனத்தில்  பூத்த
புது மலர் செம்மலராய்
உன் நினைவுகள்
என்றும் என்னை சுற்றும்.....
என் உள்ளத்திலே.......





2 கருத்துகள்:

close