புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கண்ணீர் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வியாழன், 4 ஜூன், 2020

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கண்ணீர்

குடும்பத்தின் சுமைகளும் சுகமாக !
கூடி வாழ எண்ணமிருந்தும்
 வேடிக்கைகள் தனியாக !
வாழும் முத்துக்கள் நாங்கள்
காலையிலேயே சூரியன் சிரிக்கையிலே !கண்ணை கட்டிக்கொண்டு
தெரியாத இடத்திலே
 பிடிக்காத வேலையை
பிடித்த மாதிரி காட்டிக்கொண்டு
 முட்டிமுட்டி  வேலை செய்வோம்;
குறை வேளை உணவும்
குறைவான இருப்பிட வசதியும்
 கசங்கிய உடையும்
 கட்டித்தழுவும் சூரியனும்
கண்ணீரை அடக்கும் கண்ணும்
 மேலை நாட்டவரின் வசை பாடலும்
மனதை நிலைகுலைய வைத்தாலும் வீட்டிலிருந்து பேசும்
 ஓர் வார்த்தைகள் ;
விண்ணைத் தொட்டது போல்
 விறுவிறுப்பை ஏற்படுத்தும்
பந்தாவாக வீட்டார்கள் சுற்ற ;
பந்தாட்டம் போல்
அடிக்கும் முதலாளிகளுக்கிடையே பம்பரமாகச் சுற்றும்
 புலம்பெயர்ந்த .....
.தொழிலாளர்கள் நாங்கள்

2 கருத்துகள்:

  1. அருமை சகோ பிழைப்புக்காக வேலை செய்வோரின் கண்ணிர் வாழ்க்கை கண்முன்னே நிருதியுள்ளிகள் . 😍😍😍

    பதிலளிநீக்கு

close