பந்தாட்டம் போல் நான் பறக்க
பந்து பூவாய் நீ இருக்க
உன்னை பிடிக்க முடியாமல்
கண்ணை கசக்குகிறேன்
உணவுக்குக் கூட நீ தேவையே என்று
தாகத்தால் தவிக்கிறேன்
தண்ணீரும் உன்னால்
சிலருக்கு நீ சில்லரை:
பலருக்கு நீதான் கருவறை!
சிறியவர்களுக்கு நீ விளையாட்டு
பெரியவர்கள் உனக்கு விளையாட்டு
சிலரை மட்டும் கொஞ்சம் நீ!
பலரை ஏன் கெஞ்ச வைக்கிறாய்
நடுத்தர மாந்தனுக்கு அடுத்த நிலைக்கு வர ஆசை! அடுத்த நிலை மனிதனுக்கு
அடுத்தடுத்து உயர ஆசை !
ஒரு வேளை உணவு உண்பவனக்கு
மூன்று வேளையும் உணவு உண்ண ஆசை!
இவர்களை எல்லாம் கட்டுப்படுத்த
இந்த காகிதத்திற்கு ஆசை !
அந்த ஆசைக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் இந்த பணத்திற்கு ஒரு பேராசை!
என்றாவது அந்த வானத்தையும்
வாங்கிவிடலாம் என்று......!
அடிப்படை வசதிகளையை தீர்க்க வந்தகாகிதமே
ஆணிவேராய் மாறிப்போனதே
அதை ஓடித் தேடிய நாமும்
அகதிகளாய் மாறி போனோமே!
விடை தெரியாமல் ஓடுகிறோம்
விடைத்தேடிக்கொண்டே மண்ணில் முடிகிறோம்
பணத்தின் முடிவில்லா அகதிகளாய்...........!
அறிந்து கொள்வோம்
முதன்முதலில் பணம் பயன்படுத்தியது லைடியன். ஒரு இனம் கி.மு 700 ஆம் ஆண்டில் நாணயத்தை பயன்படுத்தியுள்ளனர், ஆனால் வரலாற்று அறிஞர்கள் பணம் கி.மு 5000 வருடம் முன்பு பயன்படுத்தினார்கள் என நம்புகின்றனர்
நிருபிக்கப்பட்டவில்லை.
இந்த உலகத்தில் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை,இந்த கவிதை ரொம்ப நல்ல இருக்கு 👏👏👌
பதிலளிநீக்கு