கரைகள் இல்லாத கடலும்
கருவறை அல்லாத கோயிலும்
கவிஞன் இல்லாத கவிதையும்
இயற்கை இல்லாத மாந்தனும்
இதயம் இல்லாத மனிதனும்
இன்பம் இல்லாத வாழ்க்கையும்
இருள் இல்லாத ஒளியும்
துன்பம் இல்லாத அனுபவமும்
அனுபவமே இல்லாத ஆசானும்
அந்தியிலே மழையும் ஆதவனுக்கு சமமாகும்!
சேய் இல்லாத தாயும்;
சாவிகள் அல்லாத பூட்டும்
சந்திரன் இல்லாத சூரியனும்;
சங்கிலி தொடர்பில்லாத உணவுகளும்;
உணவில்லாத விலங்குகளும்
உவமை இல்லாத இலக்கணமும்
சுவையற்ற இனிப்புகளுக்கு சமமாகும்!
நாழிகை இல்லாத நாட்களும்;
நாட்கள் இல்லாத திங்களும்
நதிகளில்லா தண்ணீருக்கு சமமாகும்
தென்றல் இல்லாத மரங்களும்
தேன் இல்லாத தேனீக்களும்
தாளம் இல்லாத பாட்டும்
தொடர்பில்லாத மானிடமும் !
தாகம் இல்லாத தண்ணீரும்
திசுக்களில்லாத உயிரினமும்
உண்மை இல்லாத உலகுக்கு சமமாகும்!
விண்மீன் இல்லாத வானமும்
விடியல் இல்லாத காலையும்
மேகங்கள் இல்லாத மழையும்
ஒலிகள் இல்லாத இடியும்
இவை அனைத்தும் இல்லாத உலகமும்;
காதல் எனும்.......
கடவுள் இல்லா உலகத்திற்கு சமமாகும்........!
அறிந்து கொள்வோம்
பூமிதான் நிலவாக மாறியது
4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றியது, இது சூரியன் நெபுலா தோன்றியதிலிருந்து மூன்றில் ஒரு வயதை கொண்டுள்ளது .ஆரம்பகால பூமியில் எரிமலை வெளியேற்றம் ,ஆதிகால வளிமண்டலத்தை உருவாகியது ஆனால் ஆக்சிஜன் இல்லை. பிறகு பெரிய அளவிலான பூமியானது தியா என்ற கிரகத்துடன் மோதி பிளவுபட்டது. அதிலிருந்து பூமியில் பிளவுபட்ட ஒரு துண்டுதான் சந்திரன் ஆக மாறியது காலப்போக்கில் பூமி குளிர்வடைந்து சூழலுக்கு தகுந்தாயற்போல் தன்னை மாற்றிக்கொண்டது.
Semma bro 😍😍🔥🔥🔥
பதிலளிநீக்குSuper👏👏
பதிலளிநீக்குSupr anna😍🤩
பதிலளிநீக்கு