நான் பெண்ணாக - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 26 ஜூலை, 2020

நான் பெண்ணாக

கண்மணியாக நான் பிறப்பது தெரிந்தே 
கருவிலே என்னை கறைக்கின்றனர்
குழந்தையாக நான் தவழும்போதே
 கள்ளிப்பால் கொடுக்கின்றனர்
சிறுமியாக வளரும்போதே சிரித்துக்கொண்டே சில்மிஷம் செய்கின்றனர்
பருவம் அடைந்த பின்னரே ;
பணிவாக பேச கற்றுக்க
 குனிந்து நடக்க பழகிக்க
சத்தம்போட்டு சிரிக்கும் சிரிப்பையும் மாத்திக்க ;
பணிப்பெண்ணாக மறுவீடு செல் என
 பறகடித்துக்கொண்டிருந்த எண்ணங்களையும் 
புழுவைப்போல் நசுக்குகின்றனர்!
படிக்கப்போகும் கணங்களும் 
பதறி பதறி கடக்கும் நிமிடங்களாகின்றன பயந்து பயந்து 
தனிமையில் நடக்க 
பதுங்கியிருந்த சிலர் என்னை
 பலாத்காரம்  செய்ய கட்டாயப்படுத்த!
கட்டாயம் செய்யும் பெரும் புள்ளிகளும் எங்களின் உடைகளில் குறை சொல்கின்றனர்
அந்த குறைக்கு சமூகம் பதில் சொல்கிறது
எங்களை மூடிமறைக்க சொல்லி!
குறை எங்களிடம் இல்லை 
இந்த சமூகத்தின் கண்களுக்குத்தான்!
பாரதியின் புதுமைப் பெண்ணாக வாழ்ந்தாள் பெண்ணியம் பேசும் பைத்தியக்காரி 
பெண்மையற்றவர் என இழிவு கூறுகின்றனர்
பாரத சமூகத்தில் வாழ்கிறோம் நாங்கள் விலைபேசப்படும் விலைமாதுக்களாக கவர்ச்சிக்காக விற்கப்படும் பொருளாக 
கலவிக்காக மட்டும்  பார்க்கும்
சிலரின் கண்களில் 
எங்களின் உடையும் எரியுமாறு
அடக்கமாக
வாழும் அப்பாவி உயிர்களாக
திருமணம் என்ற பெயரில்
 மனம் இல்லாத ஒருவனை கரம்பிடிக்க
குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லையெனில் வாழும்
மானிட பிணங்களாக 
குடும்பத்திற்க்காக எங்களின் இலட்சியத்தை
தியாகம் செய்து கரையும் மெழுகுவர்த்திகளாக
திரும்பி திரும்பி சமூகத்திடம் 
உதை வாங்கிக் கொண்டிருக்கும்
 பெண்களாக கருதப்படும் 
இச்சமூகத்தின் பார்வைகளுக்கு
நாங்கள் என்ன வேசியா!
சுதந்திரம் கிடைத்த இந்தியாவில் 
சுதந்திரம் கிடைக்காமல் 
ஆண் ஆதிக்க சமூகத்தில் 
இன்றும் சில வீடுகளில் அடிமைக்கும் கீழ் நடத்தப்படுகிறோம்
ஆண்களின் 
கலவியின் பொம்மைகளாக......
இனியாவது மாறுமா!
நம் பெண்களின் இந்த குமறல்களின் கண்ணீர்
விடைத்தெரியா மிகப்பெரிய கேள்வியை
மர்மமாகவே விட்டுவிடுகிறேன்
ஏன் இப்படியோரு சமூகமென்று!

3 கருத்துகள்:

close