சிவப்பாக நான் மாற வேண்டும் என்று சிந்தித்து சிந்தித்து உணவு கொடுத்தனர்
ஆதவன் ஆக நான் வளர கருப்பன் என உறவுகள் பெயர் சூட்டினர்
செல்லப்பெயர் என நான் நினைக்க என் அசல் பெயரையே மறக்க வைத்தனர்
சமூகத்திலேயே கால்வைக்க சிலர் கருப்பன் என்று பேசக்கூட தயங்கினர்
திறமையிருந்தும் வாய்ப்புக்காக
ஏங்க வைத்தனர்
வெளிப்புற தோற்றத்தை கொண்டு
வேலை தேடும் இடத்திலோ
வேலை செய்யும் இடத்திலோ
வெளிப்புறமாக பார்த்து
வெளியே அனுப்புகின்றனர்
பேசக்கூட வாய்ப்பு கொடுக்காமலே
சமுதாயத்தில் முன்னுரிமைக்கக
முட்டி மோதிக் கொண்டே
எங்களின் மேல் சிவப்பு சாயம் ஏற்ற
அழகுசாதன பொருட்களை வாங்குகிறோம் இச்சமுதாயத்தில் ஓர்
நிறத்தின் பொருட்டு கிண்டல் அடிக்கின்றனர்
சிலர் நிறத்திற்காகவே கொல்லவும் செய்கின்றனர்
எங்களின் தன்னம்பிக்கையை குறைக்கின்றனர் தாழ்வு மனப்பான்மையை
ஊட்டி ஊட்டி வளர்க்கின்றனர்
எங்களை அவர்களின் பாதத்திற்கு கீழே வைக்க வேண்டும் என்று.....
இனவெறி இல்லை என்று சொல்பவர்களுக்கு
ஏன் தெரியவில்லை
இதுவும் இனவெறி என்று.....
புரியாத சமூகத்தில்
தெரியாமல் நடிக்கிறோம்
சிவப்பு சாயம் ஏற்றப்பட்ட உயிரினங்களாக எங்களை நாங்களே வெறுக்கிறோம்
சமூகத்தில் உண்மையாக
வாழ முடியாத பிறவிகளாக!
U made me cry bro.semma keep on flow🤗🤗🤗😍😍❤️
பதிலளிநீக்கு