உயர்குடி மக்களின் கல்வியாம் அதுவே
குருகுல கல்வியாம்
உயர்தரமான கல்வியாம் அதுவே
ஆங்கிலேயர் புகுத்திய கல்வியாம்
கக்கன் புகுத்திய கல்வியாம்
சாமானிய மக்களின் வயிற்றை
நிரப்பிய கல்வியாம்
சத்துணவு கொடுத்த கல்வியாம்
சத்தான மக்களை உருவாக்கிய
சக்தி நிறைந்த கல்வியாம்
அறிவின் நீரோடையாம்
ஆர்பெடுத்தோடும் அறிவின் களஞ்சியமாம்
அளவெடுக்க முடியாத நீலவானமாம்
அறிவார்ந்த சமூகம் கொடுத்த
அரசின் கல்வியாம்!
பெருமையென பெரும் பள்ளியில் சேர்க்க
பெருமீதமாக எங்களின்
இரத்தத்தை உறிஞ்சும் கல்வியாம்
அறிவான குழந்தைகளை
உருவாக்குகிறோம் என
அளவு கூறமால் பொய் சொல்லி
கடமைக்காக வேலை பார்க்கும்
கருவிழியில்லாத கருவியாம்
அறிவான சமூகத்தை உருவாக்குகிறோமென
பணத்தை மையமாக கொண்டு
புதுமை புதுமை என
புதிது புதிதாக புத்திசாலித்தனமாக திருடும்
கார்ப்பரேட்டின் கல்வியாம்;
மாணாக்களை மனஉளைச்சலுக்கு தள்ளி
மந்தநிலையிலே வைத்திருக்கும்
மண்ணுக்கும் உதவாத
மட்டமான கல்வியாம்- இனி
புதுமையான புத்துணர்ச்சிமிக்க
சமூகத்தை தோற்றுவிக்கபோகிறது;
கல்வியை ஏலத்திற்கு விற்றுக்கொண்டே!
Supurb bro
பதிலளிநீக்கு