சுதந்திரக்காற்றைஅனுபவிக்கவேண்டுமென சுதந்திரத்திற்காக இரத்த வியர்வை சிந்தி சுதந்திரம் அளித்த படைவீரர்கள் அன்று ஆங்கிலேயரிடமிருந்து அடிமைகளான நமக்கு விடுதலை தந்தனர்
இன்று விடுதலை என்ற பெயரில் பறிக்கப்படும் பேச்சுரிமையா
வீதி எங்கும் வேண்டுமானாலும் செல்லலாம் எனச் சொல்லி அடக்கப்படும் அடக்குமுறையா
சமமான நீதி என்று சொல்லி அதிகாரத்திற்கு தலைசாய்க்கும் நீதித்துறையா !
யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் எனச்சொல்லி எழுதியவரை இருந்த இடம் தெரியாமல் மாற்றிவிடும் எழுத்துரிமையா
நாட்டில் அனைவரும் சமம் என சொல்லி நான் பெரியவன் நீ சிறியவன் எனும் சம உரிமையா!
உள் நாட்டு வணிகர்களுக்கு முன்னுரிமை எனச்சல்லி உள்நாட்டு வணிகர்களை நசுக்கி வெளிநாட்டு வணிகர்களை ஊக்குவிக்கும் வணிகத்தின் உரிமையா
எங்கே வேண்டுமானாலும் தங்கலாம் என சொல்லி தங்குமிடத்திற்கு பிடுங்கும் இருப்பிட உரிமையா !
வீதியில் நடமாடும் பெண்ணை வீதியிலே உருக்குழைக்கும் ஆணாதிக்க உரிமையா
ஏழையை சுரண்டி வலியவனை மேலும் வலிமை ஆக்கும் சமத்துவ உரிமையா ஆங்கிலேயரின் அடக்கு முறையில் இருந்து நம்மை காக்க பலர் வந்தனர். இன்றுள்ள அடக்குமுறையிலிருந்து நமக்கு விடுதலைஅளிக்க யார் வருவார் எனவிடை தெரியாததுபோல் தேடுகிறோம் விடை தெரிந்து கொண்டே எனில்! அவ் விடையை நாம் தான் என்று சுதந்திரம் கிடைத்தும் கிடைக்காதது போல் உரிமைக்காகப் போராடுகிறோம். எறியும் திரியாய் ..
எதிர்பார்க்கும் சுதந்திரமும். எதிர்பார்ப்புகளாக மாறிடுமோ ஏக்கத்துடன் விடை தெரியாமலே முடிக்கிறேன் கொண்டேன்
இப்புள்ளியுடன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக