வாழ்வின் சாபம் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வெள்ளி, 9 அக்டோபர், 2020

வாழ்வின் சாபம்

பணம்படைத்த செல்வந்தர்களுக்கோ பணத்தை பதுக்கிவைத்திருக்கும் பினாமிகளுக்கோ
பசியின் கொடுமை தெரிந்திருக்க முடியுமா
தன் பிள்ளைகள் கேட்காமலேயே
தாராளமாக கொடுக்கும் பெற்றோர்களுக்கிடையே
தரமுடியாது என தயங்கி சொல்லும் பெற்றோர்களின் மனசு தீப்பற்றி எரிவதாவது தெரிந்திருக்குமா

ஆளே இல்லாத வீட்டுக்கு காவல் போட்டு அதை விருந்தினர் என்று சொல்பவர்களுக்கு அந்தி மறையும் நேரத்திலேயே ஆதவனையும் சந்திரனையும் 
உறவுகளாக வைத்து 
சாலை ஓரத்தில் நிரந்தர விருந்தினராக தங்கும் அவலநிலையாவது தெரியுமா
உடுத்தும் உடையில் உலகை மறந்து கவர்ச்சிக்காகவே வாழ்பவர்களுக்கிடையே உடையின்றி கவர்ச்சியாகவே 
உலகில் திரிகிறார்கள் என தெரிந்திருக்குமா
மூன்று வேளை உணவு உண்பவர்களுக்கு ஒரு வேளை உணவின் அருமை தெரிந்திருக்க முடியுமா
இதை அனைத்தும் தெரிந்த ஒருவனுக்கு வாழ்வின் சாபக்கேடு வறுமையென தெரிந்திருக்குமா
வயிறு பற்றி எரியும்போது
 வாழ்வே நரகமாய் இருப்பதை உணர்ந்திருக்க முடியுமா
அப்படி உணர்ந்திருந்தால்
 மனிதனைவிட இவ்வுலகில் மிகப்பெரிய அரக்கன் ஒன்று உண்டு என தெரியாமலிருக்க முடியுமா 
அப்படித் தெரியாமலிருந்தும்
 புரியாமலிருக்க முடியுமா
 அப்படி புரியாமல் இருந்தால்
உன்னை நோக்கி ஓர் அரக்கன்
சிரித்துக்கொண்டே வருவான் 
உன் மரணம் வரையில்........!
 அவன் தான் மனித வாழ்வின் கொடுமையின் தலைவனான 
         வறுமை!!!!!

1 கருத்து:

  1. அருமை உங்கள் கருத்து வறுமையின் நிறத்தை மேற்கோள்காட்டி பேசுகிறது.

    பதிலளிநீக்கு

close