இருளே உலகமென
கணகளில்லாமல் உலகம் இப்படிதான் இருக்குமா என கற்பனையில் இருந்தேன்.
இன்று பகலே உலகமென
இன்று பகலே உலகமென
இரட்டிப்பான மகிழ்ச்சியில்
கண்கள் தெரியும்போதே....
ஆதவன் ஒளி கண்ணை மறைக்குமென
ஆதவனை பார்க்காதே என்கின்றனர்
இயற்கையை இரசிக்க வேண்டுமென இருந்த எனக்கு
செயற்கை உலகின் தலைவனாக
செல்பேசியை இரசிக்க வைக்கின்றனர் !
மனிதர் அனைவரும் மனிதம்
நிறைந்தவர்கள்என
மயக்கத்தில் இருந்த எனக்கு
மனிதன் தான் மயக்கத்தில் இருக்கிறான் என காட்டினர்
இதுவரை கும்பிட்ட
இறைவனை காண வேண்டுமென
இறைவனை பார்க்கச்சென்றால்
இறை நம்பிக்கையை பயன்படுத்தி சிலர்
இறைவனே நான் தான் என்கின்றனர்.
உணவை கையில் எடுத்தால்
உணவின் ருசியை தெரிந்து எனக்கு அந்த
உணவும் கலப்படமென
உணர்வுபூர்வமாக கூறுகின்றனர்.
உறவு என்பது பாசம் கொடுக்குமென
உணர்வின் பித்தத்தில் இருந்த எனக்கு
உறவு என்பது வெறும் இலாபத்துக்காக
என்பதையும் பார்க்க வைத்துவிட்டனர்.
இவ்வளவு நாள்
நான்தான் குருடன் என்று
நினைத்து வருந்தினேன்
இன்று உண்மையிலேயே வருந்துகிறேன்'
கண் இருந்தும்
இவர்கள் குருடர்களே என்று
இருளான கண்ணில்லாத உலகம் எவ்வளவு இனிமையான உலகமென
இப்பொழுது புரிகிறது
சொல்ல வார்த்தைகள் இன்றி முடிக்கிறேன்
மீண்டும் என் கற்பனை
உலகில் போக தவிக்கிறேன்
இப்புள்ளியுடனே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக