நெஞ்சில் போட்டு வளர்த்த பிள்ளைகள்
நெஞ்சு நிமிர்ந்து நடக்க வேண்டுமென
நெற்றி வியர்வை சிந்தி படிக்கவச்சேன்
பக்குவமா பிள்ளை வளர வேண்டுமென
பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சு கொடுத்தேன்
பட்டி தொட்டி எல்லாம்பிள்ளை உயர
பட்டணம் போய் போய் ஓடிதேஞ்சேன்
தோள் மேல் வளர்ந்த பிள்ளையை
தோழனாக தட்டிக் கொடுத்தேன்
தோழனாக நான் இருக்க...!
தோள் மேல் வளர்ந்த அவனுக்கும்
தொட்டில் பிள்ளை பிறந்தது,
தோழனாக இருந்த நான்
தள்ளாடும் தாத்தாவாக மாற.!
தந்தையாக மாறிய அவனும்
தன் குடும்பத்தின் சுமையை ஏற்க
தனிக் குடும்பமாக வெளிநாடு சென்றுவிட்டான்,
தட்டிக் கொடுத்த எனக்கும்
தடியே காலாய் மாறி போயிருச்சு...!
தன் தந்தைக்கு எல்லாவித வசதிகளையும்
செய்து கொடுத்தவனுக்கு
தன் தந்தையின் தனிமை உணர்வு புரியவில்லை!
அன்று தாலாட்டு பாடியவனுக்கு
இன்று தடியைக் கூட பிடித்து நடக்க பிள்ளைகள் அருகில் இல்லை ;
நெஞ்சார உழைத்தவனுக்கு
நெஞ்சில் போட்டு மகிழ பேரன்களும் பேத்திகளும் கூட இல்லை;
தடவு கின்ற வயதில்!
தடியே நண்பனாய்
குடும்பமாய் தங்கி மகிழ்ந்திருந்த வீட்டில்
குடும்பத்தின் நினைவுகளுடன் சடமாய் கிடக்கிறேன்
கூன் விழுந்த கிழவனாய்..!
பல் உதிர்ந்த முதியவனாய்,
புன்னகையை விரக்தியில் தொலைத்துவிட்டு
பார்க்கும் அனைவரிடமும் புலம்புகிறேன் பைத்தியம் போல்;
பிள்ளைகளிருந்தும் பிள்ளையில்லா அனாதை என்று..!
பிள்ளை ஒரு நாள் வருவான் என
விடை தெரியாமல் வீட்டின் சுவரோடு பேசுகிறேன்
வீட்டின் சுவரும் எண்ணிப் பார்த்து
வாய்விட்டு சிரிக்கிறது!
வீதியிலே விட்ட உன்னை வீதியிலே எடுத்துச் சொல்லும்போது உன்னை அடக்கம் செய்ய வருவான் என்று!
இந்த முதியவரின் அழுகுரல்
என் மகளுக்கோ மகனுக்கோ கேட்குமா என்று புரியாத புதிரில் முடிக்கிறேன்
இவ்வரிகளுடன்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக