சுருக்கம்- கடவுளின் துகள், கடவுளின் கோபமோ, மனிதனின் சாபமோ, இயற்கையின் பரிதவிப்போ! கவிதை வரிகளில் இதோ!!!!!
கொஞ்சும் அழகை மிஞ்சுகின்ற வகையில்
கொஞ்சி பேசிட காடுகளை கொடுத்தேன்
கொஞ்சம் கொஞ்சமாக அதை அழித்து நீ
கொஞ்சி மகிழ்ந்திட வீட்டை கட்டினாய்
அமிழ்து எனும் தேன்னினும் இனிமையான
முத்து போலான தண்ணீரைக் கொடுத்தேன்
அறிவியல் என்ற பெயரில்
அதை கூறு போட்டு விற்று அழியாய்
மாற்றினாய்
மணம் வீசும் தென்றலை கொடுத்தேன்;
மனம் போன போக்கில் தொழிற்சாலைகளை
உருவாக்கினாய்;
இன்று தென்றல் இருக்கிறது
தென்றலின் மணத்தைக் காணவில்லை
காற்று மாசு இருக்கிறது !
தூய்மையான காற்றை தான் காணவில்லை,
தூய்மையான காற்றும் இருக்கிறது அதுவும்
ஏதோ ஓரிடத்தில் காசுக்கு என்று..... !
ஒவ்வொரு வகையான நிலத்தையும்
கொடுத்தேன் ,
நான் காலடியில் இருப்பதால் என்னவோ
என்னை எளிதில் அசுத்தம் செய்து
இரசிக்கும் இடத்தையும் சகிக்க முடியாத
நிலமாக மாற்றிவிட்டனர் கழிவுகளால்....
சின்ன சின்ன பூச்சிகளின் தெம்மாங்கு பாட்டும்
இரசிக்க கொடுத்தேன்
இன்று முன்னேற்றம் என்ற பெயரில்
சின்ன சின்ன பூச்சிகளின் ஓசையை மறந்துவிட்டு
அலைபேசியில் தேடுகிறோம் பூச்சிகளின்
இயற்கை ஓசை என்ன என்று.....
இன்று மனிதர்கள் உள்ளனர்
ஆனால் மனிதம் இல்லை
இனங்கள் உள்ளன
ஆனால் அது விலங்கினங்களுக்குள் இல்லை
பேரழிவுகள் உள்ளன
ஆனால் அதைத் தாங்க
இயற்கையிடம் சக்தி இல்லை
மனிதம் இல்லாத மனிதர்கள்
சுயலபத்தால் செய்த தப்பிற்க்காக
இயற்கையான என்மீது பழி சுமத்துகின்றனர்
பழிசுமத்த நான் இருப்பதால் என்னவோ இறுதிவரை இம்மானுடம் தன் தவறை உணரவில்லை !
இன்று உணர்ந்தாலும் திரும்பிப் பார்க்க நான்
இல்லை
உணராமல் மகிழ்ச்சியின் போதையில்
இருக்கின்றனர்
இழப்பது என்ன என்று தெரியாமல்
இழப்பது இயற்கை அன்று
அவரவர் எதிர்கால சந்ததியின் எதிர்காலம்
என்று ......
மனக் கசப்புடன் மனம் கலங்கி
மானிட உலகைப் பார்த்து ஏக்கத்துடன்
முடிக்கிறேன்
விலை மதிக்க இயலாத வார்த்தைகளால்
கண்ணீருடன் தவழ்கிறேன்
விலை மதிப்பில்லா இந்த உலகம்
முடியப்போகிறது என்று . .
மீண்டும் இன்னொரு விடியலை நோக்கி
காத்துக் கொண்டிருக்கிறேன்...
என்னை நானே அழித்துக் கொள்ள......
Words made me more emotion. Bravo bro👌👌👌
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குVery nice 👏👏
பதிலளிநீக்கு