தி ஹாரர் நைட் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தி ஹாரர் நைட்

      தி ஹாரர் நைட்      

கவின், விவேக் ஆகிய இருவரும் நண்பர்கள் அவர்கள் இருவரும் Game developer's ஆக வேலை பார்கின்றனர்
        அவர்கள் இருவரும்  வீக்எண்ட்   பாண்டிசேரி செல்வதாக. முடிவெடுத்தர். கவின் அவர்களுடைய இன்னொரு நண்பனான தருண் என்பவரையும் நம்மோடு அழைத்து செல்வோம் என விவேகிடம் கூறினான். விவேக் தருணுக்கு Call செய்து பாண்டிசேரிக்கு தங்களோடு வருமாறு அழைத்தான். தருணும் அதற்கு சம்மதித்தான்.

      அவர்கள் மூவரும் அன்று இரவு 10 மணிக்கு அவர்களுடைய Car ஐ எடுத்து சென்றனர். அவர்கள் காரில் செல்லும் போது ஆவிகள் பற்றிய ஒரு Showவை கேட்டுக்கொண்டு சென்றிருந்தனர். அப்பொழுது இன்னொரு ஒரு Card  வேகமாக இவர்களை மோதுவது போல் வந்து சென்றது இதனை பார்த்த கவினுக்கு கோபம் வந்தது. அவர்ள் வேகமாக அந்த Car ஐ துரத்தினார்கள். அந்த Car இன் டிரைவரை அழைக்குமாறு விவேக்  தருணிடம் கூறினான். ஆனால் தருண் எந்தவித பதிலும் அளிக்காமல் அமர்ந்திருந்தான். அவனுடைய முகமோ பயத்தில் வெளு வெளுத்திருந்தது. அவன் உறைந்தது போல் உட்கார்ந்திருந்தான். இதனை பார்த்த கவின் தருண் என்ன ஆச்சு? ஏன் இப்படி பயத்தோடு அமர்ந்திருப்பது போல் இருக்கிறாய். என்று விவேக் கேட்க தருண் அவர்கள் இருவரிடமும் அந்த காரில் டிரைவர் யாரும் இல்லை Staring தானாக சுற்றுகிறது என கூறினான்

இதை கேட்ட இருவருக்கும் பயம் உள்ளே எட்டிப் பார்த்தது
. விவேக் குரலில் ஓர் நடுக்கத்தோடு நீ இருட்டில் சரியாக கவணித்திருக்கமாட்டாய் என கூறினான். ஆனால் தருணோ இல்லை Car இன் உள்ளே லைட் ஆனாகிதான் இருந்தது அந்த Cars இன் உள்ளே யாருமே இல்லை என கூறினான்.
நம்ம இப்போ போகும்போது ஆவிகள் பற்றிய Show கேட்டுகொண்டு சென்றதால்கூட உனக்கு அப்படி தோன்றியிருக்கும் என கவின் கூறினான். ஆனால் தருணின் மனமோ அதனை ஏற்க மறுத்தது. சில மணி நேரங்கள் அந்த காரில் ஓர் அமைதி நிலவியது. ஏதோ ஒரு குரல் தருண் தருண் என அழைப்பது போல் தருண் உணர்ந்தான். உடனே அவர்கள் இருவரிடமும் உங்களுக்கு ஏதேனும் குரல் கேட்கிறதா எனக் கேட்டான். கவின் தருணிடம் நீ அதையே நினைத்து கொண்டிருக்கிறாய் அதனால்தான் உனக்கு அப்படி தோன்றுகிறது என கூறினான். மீண்டும் ஓர் அமைதி நிலவுகிறது.
ஒரு சில மணி நேரங்கள் கழித்து விவேக் தன் அருகில் யாரோ அமர்ந்திருப்பது போல் உணர்ந்தான். அமைதியாக சற்றே தன் தலையை திருப்பி அருகே பார்த்தான் ஆனால் அவன் அருகிலோ யாருமே இல்லை. மீண்டும் ஒரு சில மணி நேரங்கள் ஓர் அமைதி நிலவுகிறது. Car இன் முன்னே ஒரு பெண் மோத வருவதுபோல் கவினுக்கு தெரிந்தது கவின் உடனே Sudden break போட்டான். ஆனால் அங்கோ யாருமே இல்லை. தருனும், விவேக்கும் என்ன ஆச்சு? ஏன் Sudden break போட்ட? என வினவினார். கவின் ஒன்றுமில்லை என கூறிவிட்டான். அங்கு ஒரு கடை இருப்பதை விவேக் பார்த்தான் நான் அங்கு சென்று Water bottle வாங்கி வருவதாக கூறிவிட்டு அந்த கடைக்கு சென்றான். கவினும், தருனும் Car இன் அருகே நின்று கொண்டிருந்தான். தருணுக்கு மீண்டும் அந்த குரல் கேட்டது. அந்த குரல் தருணை "உன் எதிரில் இருக்கும் வீட்டிற்குள் வா" என அழைத்தது
 அவனும் சற்றே யோசிக்காமல் அந்த வீட்டுக்குள் சென்றான். அவன் செல்வதை பார்த்த கவின் தருனை அழைத்தான். ஆனால் தருனோ எந்தவித பதிலும் அளிக்காமல் அந்த வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தது. அவனை பின்தொடர்ந்து கவினும் அந்த வீட்டுக்குள் சென்றான். கடைக்கு சென்று திரும்பிய விவேக் இவர்கள் இருவரும் எங்கு சென்றிருப்பார்கள் என தேடிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு Message வந்தது கவினின் போனிலிருந்து "நாங்கள் இருவரும் உன் எதிரில் உள்ள வீட்டில் இருக்கிறோம் அங்கே வா" என அந்த Message இருந்தது. விவேக் அதை பார்த்துவிட்டு அந்த வீட்டுக்குள் சென்றான்.
          அது ஒரு அழகான பங்களாவாக தென்பட்டது. கவின் தருணை அழைத்து ஏன் இந்த வீட்டிற்குள்  வந்தாய் எனக் கேட்டான். அதற்கு தருண் எனக்கு ஒரு குரல் கேட்டது அந்த குரல் என்னை இந்த வீட்டிற்குள் அழைத்தது எனக் கூறினான். கவின் ஒரு பயத்தோடு கூடிய குரலில் நீ எப்படி இங்கு வந்தாய் நாங்கள் உள்ளே வருவதை நீ பார்த்தாயா? எனக் கேட்டான். அதற்கு விவேக் உன்னோட மொபைலிருந்து எனக்கு Message வந்தது எக் கூறினான். அதைக் கேட்ட கவின் நடுக்கமான குரலில் என்னிடம் மொபைல் இல்ல என்னோட மொபைல் காரில் உள்ளது எனக் கூறினான். அதைக் கேட்ட விவேக் பயத்தில் உறைந்து விட்டேன். தருணுக்கு மீண்டும் அந்த குரல் கேட்டது அந்த குரல் கேட்டது அந்த பங்களாவில் உள்ள அறைக்கு வருமாறு அழைத்தது அதை இருவரிடமும் தருண் கூறினான்.  அவர்கள் இருவரும் அங்கு செல்ல வேண்டாம் என தடுக்க முயன்றனர்.ஆனால் தருண் அவர்கள் சொல்வதை கேட்காமல் அந்த அறையை நோக்கி நடந்தான்.
               தருண் அந்த அறைக்குள் சென்றான். அந்த அறைக்குள் யாருமே இல்லை அங்கு ஒரு கண்ணாடி இருந்தது. அந்த கண்ணாடியில் அவன் பார்த்ததை கண்டு பயந்துவிட்டான். அந்த கண்ணாடியில் அவனுடைய நண்பர்கள் தன்னை தானே குத்திக் கொல்வது போல் தெரிந்தது,. இதைப் பார்த்து அவன் நண்பர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓடினான். அங்கு அவனுடைய நண்பர்கள் இருவரையும் காணவில்லை. கவின், விவேக் எங்கே இருக்கிறீர்கள் என சத்தமாக கூப்பிட்டான். அந்த நிமிடம் அழகான பங்களாவாக தோற்றமளித்த அந்த பங்களா முழுவதும் இருள் சூழ்ந்தது. பழைய பாழடைந்த பங்களா போல் தோற்றமளித்தது. கதவுகள் படபடவென அடித்தன. தருண் பயந்துகொண்டு அந்த பங்களாவை பார்த்தான் மீண்டும் அந்த குரல் கேட்டது. அந்த குரல் " GAME BEGINNS NOW" எனக் கூறியது. அதைக் கேட்ட தருண் அந்த வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தான். அப்பொழுது அவன் முன்பு பார்த்த ஆள் இல்லாமல் ஓடிய கார் அவன் முன்னே வேகமாக வந்து நின்றது. அந்த காரின் உள்ளே இருந்து ஓர் அழகான பெண் ஒருத்தி இறங்கினாள். அவள் தருணிடம் நீங்க மிகவும் கஷ்டமான நிலைமையில் இருக்கிறீங்க இந்தாங்க இந்த தண்ணீரை குடிங்க என சொல்லி ஒரு Water bottle ஐ தருணின் கையில் கொடுத்தாள். தருண் எதுவும் அறியாமல் பயத்தில் என்ன செய்வதென்று புரியாமல் நின்றுகொண்டிருந்தான்.
                     தருண் அந்த பெண்ணிடம் நீங்க யாரு? நான் கஷ்டத்துல இருக்கேன் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் முன்னாடி பார்க்கும்போது இந்த காரில் யாருமே இல்லையே அது தானாக ஓடியது இப்போ இந்த காரை நீங்க ஓட்டிகிட்டு வருறீங்க. அப்போ இங்க நடந்த எல்லா செயலுக்கும் காரணம் நீங்கதானா? சொல்லுங்க எனப் படபடவென பேசினான். ஆனால் அந்த பெண்ணோ எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக நின்றாள். அதை பார்த்த தருணுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் கோபத்துடன் மீண்டும் அந்த பெண்ணிடம் நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க? என்னோட பிரெண்ட்ஸ் எங்க? அவுங்க இரண்டு பேரையும் என்ன பண்ணீங்க? எனக்கு கேக்குற குரல் யாரோடது சொல்லுங்க? என மீண்டும் படபடவென பேசினான். அதற்கு அந்த பெண் உனக்கு நடப்பது எதுக்கும் நான் காரணமில்லை உனக்கு தோன்றும் சந்தேகங்களுக்கு உன்னிடமே தீர்வு உள்ளது. அதை நீ தான் கண்டுபிடிக்க வேண்டும் நான் இங்கு நீ ஆபத்தில்  இருக்கிறாய் என்பதை தெரிவிப்பதற்காகவே இங்கு வந்தேன் எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.
              அவன் அந்த பெண் கூறியவற்றை நினைத்துக்கொண்டே . பிறகு அந்த பங்களாவுக்குள் தான் நமக்கான தீர்வு கிடைக்கும் என மனதில் தைரியத்தை வரவழைத்து மீண்டும் அந்த பங்களாவுக்குள் சென்றான் பங்களா முழுவதும் இருளால் சூழப்பட்டிருந்தது. நான் சென்ற அறைக்கு மீண்டும்  சென்று ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்தை பார்ப்போம் என்று அந்த அறையை தேட முயன்றார். அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது அவன் தன்னுடைய மொபைல் டார்ச்சை ஆன் செய்தான். அந்த முதல் தளத்தில் உள்ள அந்த அறையை  நோக்கி நகர்ந்தான்.அவனுக்கு அந்த குரல் மீண்டும் கேட்டது. அது "நீ மீண்டும் இங்குதான் வருவாய் என்று எனக்கு தெரியும் இனி நீ இந்த இடத்தை விட்டு வெளியே செல்ல முடியாது" எனக் கூறி பிறகு பலத்த குரலில் சிரித்தது. அந்த சிரிப்பு சத்தத்தில் அந்த பங்களாவே ஓர் ஆட்டம் கண்டது. தருண் பயத்தை வெளிக்காட்டாமல் அந்த அறையை நோக்கி நகர்ந்தான். பிறகு அந்த அறைக்குள் நுழைந்தான். அங்கு ஒரு பத்து நபர்களுடைய புகைப்படங்கள் இருந்தன. அதை பார்த்து கொண்டிருந்தான். அப்பொழுது தீடிறென அவன் முகம் பயத்தால் வெளுவெளுத்தது. அந்த புகைபடத்தில் பத்தாவதாக இவனுடைய புகைப்படம் இருந்தது. அதை கண்டு அதிர்ந்தான். மீண்டும் அந்த குரல் ஒளித்தது "நீ இங்கு எவ்வுளவு தேடினாலும் உனக்கு எந்த ஒரு தடயமும் கிடைக்கப்போவதில்லை" எனக் கூறியது. பிறகு அந்த குரல் கேட்கவில்லை அப்பொழுது அவன் பின்னாடி யாரோ நிற்பது போல் உணர்ந்தான் ஆனால் அங்கு யாருமே இல்லை மீண்டும் அந்த குரல் கேட்டது " நீ நிற்பதற்கு பக்கத்து அறையில் உனக்கான ஒரு Gift வைத்திருக்கிறேன் அதை சென்று பார்" என்றது. அவனும் அந்த அறைக்கு சென்று பார்த்தான் அந்த அறையில் கவின் அகோரமாக அமர்ந்திருந்தான் தருணை பார்த்ததும் அவனை கொல்வதற்காக துறத்தினான் தருண் அவனிடமிருந்து தப்பித்து இன்னொரு அறைக்குள் நுழைந்தான் அந்த அறையின் கதவை பூட்டிவிட்டான். பிறகு அந்த அறையை சுற்றி பார்த்தாள் அந்த அறையில் ஓர் அலமாறி இருந்தது அதை திறந்தான் அவனுக்கு பயத்தில் ஒரு நிமிடம் இதய துடிப்பு நின்று விட்டது போல் இருந்தது அதிலிருந்து ஒன்பது பொனங்கள் அவன் புகைப்படத்தில் பார்த்த நபர்கள் அவர்களுள் அந்த பெண்ணும் இருந்தாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை பயத்தில் உறைந்ததுபோல் நின்றான். மறுபடியும் அவனுக்கு பின்னால் யாரோ இருப்பதுபோல் தோன்றியது. அவன் திரும்பி பார்த்தான் அங்கு அந்த பெண் நின்றாள் அவனுக்கு பயத்தில் கை, கால்கள் எல்லாம் உதறின. அவன் நடுங்கிய குரலோடு நானும் உங்களை போல் சாகபோகிறேனா? என்றான். அதற்கு அந்த பெண் ஆம் என்றால். அந்த குரல் யாரோடது என்னைய என்னோட ப்ரண்ட்ஷே ஏன் கொலை செய்யபாக்குறாங்க? எனக் கேட்டான். அதற்கு அந்த பெண் அந்த குரல் மந்திரவாதியின் குரல் என்றால். உனக்கு இருட்டு உலகம் என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டால் அதற்கு தருண் தெரியாது என்று கூறினான். அதற்கு அந்த பெண் அது ஒரு மாய உலகம் அந்த மாய உலகத்தில்தான் நீ இருக்கிறாய். மாய உலகமோ நான் எப்படி இங்கே வந்தேன் என கேட்டான் நீ இந்த பங்களாவில் முதல் தளத்தில் உள்ள கண்ணாடியை பார்த்தாயா என்று கேட்டால் அதற்கு தருண் ஆமாம் என்றான் அதுதான் இந்த மாய உலகத்திற்கான நுழைவாயில் என்றால் எதுக்காக அந்த மந்திரவாதி என்ன கொல்ல பாக்குறாரு என கேட்டான் அதற்கு அந்த பெண் வெளிச்சத்தில் உள்ளவர்களில் ஒரு பத்து நபரை இந்த இருள் உலகிற்கு கொண்டு வந்து கொலை செய்து அந்த ஆவிகளை பலி கொடுத்தாள் அந்த மந்திரவாதியின் கட்டுக்குள் இந்த இருள் உலகம் முழுவதும் வந்துவிடும். பிறகு அவனே இருள் உலகின் அரசனாய் இருப்பான் அதற்காகதான் இந்த பத்து நபரை இந்த மாய உலகிற்கு கொண்டு வந்தான். உன்னோட ப்ரண்ட்ஷ் அவனுடைய மாய கட்டுக்குள் இருக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் உன்னை கொலை செய்ய துரத்துகின்றனர் எனக் கூறினாள். சற்று நிமிடத்தில் அந்த பெண் மறைந்துவிட்டாள். அவள் என்ன செய்வதென்று அறியாது பயத்தில் நின்றுகொண்டிருந்தான். அந்த அறையின் கதவை யாரோ உடைப்பது போல் சத்தம் கேட்டது. ஒரு சில நிமிடங்களில் அந்த கதவை உடைத்துக்கொண்டு கவின் கத்தியோடு ஓடி வந்தான் அவன் தப்பி ஓட முயலும் போது அவன் கையை ஓட முடியாத அளவிற்கு பின்னே இருந்து விவேக் பிடித்துகொண்டான். அவன் கத்தியை தூக்கி அவனை குத்த வந்தான் தருண் பயத்தில் கண்ணை இருக்க மூடினான். அப்பொழுது அவன் முகத்தில் யாரோ தண்ணீர் தெளிப்பது போல் இருந்தது அவன் சட்டென்று கண்ணை முழித்தான். அங்கு கவின், விவேக்கும் அவன் முன்னே நின்று "ஹேப்பி பர்த்டே மச்சான்" என சந்தோஷமாக கத்தினர். அந்த நிமிடம் தான் அவனுக்கு நடந்தது அனைத்தும் கனவு என்பது புரிந்தது…….
      வாழ்வின்  நடக்கும் அனைத்து அனுபவங்களும் தி ஹாரர் நைட்டே........

1 கருத்து:

close