வருங்காலம் விடியலாய் அமைவதற்காக ,
உரிமை வெற்றியை பிடிப்பதற்காக ,
வீதியிலே நின்று....
வீரத் தியாகங்கள் பல செய்து...
இரத்த வியர்வை சிந்தி
உரிமைக் குரல் கொடுத்தவர்களை.
சிலையாய் மாற்றி
சிலரின் பலனுக்காக,
அவர்களை உரிமை கொண்டாடுகின்றனர்
அவர் எங்களின் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்று.....
எதை வேண்டாம் என்று போராடி
அதற்காகவே வாழ்வை
அர்ப்பணித்தவர்களுக்கு மரியாதை
என்ற பெயரில்
அவர் வேண்டாம் என்று போராடிய கொள்கை
முன்னிட்டே மரியாதை செலுத்துவர்
மூட்டாள்தனமாக
சிலையை நிற்பதால் என்னவோ !
இவர்கள் செய்யும் அனைத்தும்
அந்த சிலைக்கு தெரிவதில்லை
ஒருவேளை...!
அந்த சிலைக்கு மட்டும் காது கேட்டால்
அன்றே அந்த இடத்தைவிட்டு அந்தர் பல்டி
அடித்துக் கொண்டு ஓடிவிடும்..
சுதந்திரக் காற்றை அனுபவிக்க வேண்டுமென
போராடி உயிர்நீத்தவர்களுக்கும்
நாம் இறந்த பின்பும் சிலையாய்..
நம்மைச்சுற்றி
நான்கு பக்கமும் கூண்டுதான் உள்ளதென
நமட்டு சிரிப்பு தான் சிரிக்க முடியும்
காரணம்.......
உயிருள்ள மனிதர்களும்
உயிரற்ற சிலையாகத்தான்
தினமும் வாழ்கின்றனர் என்று.....
நாகரீக உலகில் பாகுபாடுகளை உருவாக்கி.
நாகரீகமற்றதனமாய்!
காட்டுமிராண்டிகளாக வாழ்கின்றோம்
மாண்பற்றவற்களாக...
இரத்த வியர்வை சிந்திய
உயர்ந்த தலைவர்களின் சிலைகளும்...
இன்று கண்ணீர் வடிக்கிறது
இன்னும் எவ்வளவு நாள் நான் இங்கே இருந்து
இதையெல்லாம் பார்க்கவேண்டுமே என்று..
போராடி சிறையில் இறந்தவர்கள் ,
இன்று சிலையாய்
சிறைக்குள் நிற்க்கிறார்கள்
போலிஸ் பாதுகாப்புடனே......
வேடிக்கையாகவே சிரித்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.....
சிலையாகவே முடிக்கிறேன்
இத்துடனே....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக