போராட்டம் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வியாழன், 8 ஏப்ரல், 2021

போராட்டம்

   வாழ்க்கை தினமும் ஏதோவொன்றுக்கு எதிராக போராடுகிறோம் இதோ அதை பற்றிய வரிகள்

விண்மீன்கள் பூமியின் மீது விழாமல் இருக்க போராடுகின்றன!
பூமியானது சூரிய குடும்பத்தில் இருந்து விலகாமலிருக்கவும்;
சூரியனானது காலையில் குளிராமலிருக்கவும்;
சந்திரனானது இரவில் வெப்பத்தை கொடுக்காமலிருக்கவும்;
மேகங்களும் மழையாய் கரையாமலிருக்கவும்;
மழையும் வீணாக கடலில் கலக்காமலிருக்கவும்
கடலும் தன் உப்பின் தன்மையை அதிகரிக்காமலிருக்கவும்;
உப்பானது தன் வெண்மையை குறைக்காமலிருக்கவும் போராடுகின்றன!
பெரிய உயிரினங்கள் உணவுக்காகவும்
 சிறிய உயிரினங்கள் உணவாகமலிருக்கவும் போராடுகின்றன!

கண்ணின் இரு விழிகளும் எப்பொழுதும் உறங்காமலிருக்கவும்
உறக்கம் வரும்போதெல்லாம் கண் இமைகள் திறக்காமலிருக்கவும்;
சிலர் வாய் திறந்து பேசாமல் இருக்கவும் போராடுகின்றனர்;
பலர் பேசாமலே பேராசையுடன் பிறரை எப்படி வீழ்த்தலாம் எனவும்;
பேராசை கொண்டவர்களிடமிருந்து எவ்வாறெல்லாம் பணத்தை பிடுங்கலாம் என ஆதிக்கம் கொண்டவர்களும்;
ஆதிக்கம் கொண்டவர்களிடமிருந்து எப்படியெல்லாம்; 
ஏமாற்றலாம் என படித்தவர்களும் போராடும் வேளையிலே!
எதுமே அறியா பாமர மக்கள் மட்டும்
உலகில் உயிரோடு வாழவே போராடுகின்றனர்
தினமும் துன்பங்களுக்கு எதிராகவும் ;
பசியை நண்பனாகவும்;
 நண்பர்களை துணையாகவும்; 
நோயினை இன்பமாகவும் ஏற்று !போராடிக்கொண்டே இருக்கின்றனர் 
பாடுபட்டு உழைக்கும் 
அப்பாவி உயிர்களாக...........!

2 கருத்துகள்:

close