கொரோணாவும் வறுமையும் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வெள்ளி, 14 மே, 2021

கொரோணாவும் வறுமையும்

 
கோரோணாவால் மக்களின் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது வறுமையில் அதன் பங்கு என்ன என்பதை விளக்கும் கவிதை வரிகள் இதோ


வீதியே வீடாய்கொண்டவனையும்,
வீதியளவு வீட்டை கொண்டவனையுமும்,
வீதியிலே போராடுபவனையும்,
போராட்டங்களை அடக்க நினைக்கும் ஆட்சியாளனையும்,
தொல்லை செய்துவிட்டது இந்த தொற்றுநோய்,
நடுத்தர மக்களையும் நடுத்தெருவுக்கே கொண்டுவந்துவிட்டது இந்த கொரோணா!
வீடுயிழந்து வேலையிழந்து;
உணவிழந்து உறவிழந்து;
உயிருக்காக மானமிழந்து;
வயிற்றுப் பிழைப்புக்காக வழியில்லாமல் பிறரிடம் கையேந்துகிறோம்...
மிஞ்சும் உயிரை காப்பாற்ற.....!
மருத்துவமனைக்கு ஓடுகிறோம் மருந்து வாங்க
பணமில்லை!
வீதியெங்கும் பிணங்கள் 
ஏறிக்க வசதியுமில்லை! விறகுமில்லை!
தூக்கி ஏறியபடுகின்றனர் நதிகளிலே..!
இறுதிச்சடங்கு செய்ய வக்கில்லாமல்...
ஐயோ! .
மூச்சு விடவே சிரமமாய் இருக்கிறது
பிணங்களுக்கு மத்தியிலே!
ஆக்ஸிஜனுக்காக மருத்துவமனை வெளியிலே
காத்திருக்கிறோம் 
மூச்சுவிட!
காசுயிருந்தால்தான் ஆக்ஸிஜன் என்றால்
நாங்கள் இந்த நாட்டில் வாழ்வதே தவறா!
வறுமையில் வாழ்ந்து எங்கள் தவறா! இல்லை
எங்களை வறுமைக்கு தள்ளிய இப்பெருந்தொற்றின் தவறா! இல்லை
ஆட்சியாளர்களின் தவறா!
யார் தவறு?
மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் வாங்க வழியில்லாமல்
தடுப்பூசி போட்டும் பயனில்லாமல்
அடுத்த தடுப்பூசி போட உதவ யாருமில்லாமல்
பிணங்களுடன் பிணமாக படுத்துக்கிடக்கிறேன்
இப்போது!
முடிவிலா கொரோணா !
சிலரை வறுமைக்கு தள்ளி
பலரின் முடிவுக்கு காரணமாய் போய்விட்டதே
இறந்து கிடக்கும் பிணங்களின் மனசாட்சியாக முடிக்கிறேன் இத்துடனே......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close