தோளுரித்திடு தோழா - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

புதன், 26 மே, 2021

தோளுரித்திடு தோழா


 இன்றைய உலகின் சுறாவளியாக
சுழன்று தாக்கும் நோய்களை
புயலாக வந்து தடுத்து நிறுத்தும் மருத்துவர்களும்
அந்த மருத்துவர்களுக்கே ஊதியத்தை
கூட்டித் வைக்கும் போராளிகளையும்
அந்த நோயாளிகள் உருவாக காரணமான
ஆராய்ச்சியாளர்களும் ஒரே கூட்டாளிகளோ!
முன்பு உணவே மருந்தாகவும்
இன்று‌‌ மருந்தே உணவாகவும்  மாறியதும்
வீட்டு மருத்துவத்தை வீதியிலே மறந்துவிட்டு
நாட்டு மருத்துவத்தை கேவலம் என
மக்களிடம் புகுத்திய கார்ப்பரேட்டுகளும்
கார்ப்பரேட்டுகளின் காப்பாற்ற நினைக்கும் அரசாங்கமும் ஒருவேளை கூட்டாளிகளோ!
சாப்பிட்ட சாப்பாடு ஒத்துக்காமல்
வயிற்று வலி என வீட்டில் சொன்னாள்
வீட்டில் உள்ளவர்களும் ஆஸ்பத்திரிக்கு போக சொன்னாங்க
ஆஸ்பத்திரியில மருத்துவர பார்த்தா அவரு ஸ்கேன் எடுக்கச் சொன்னாங்க
ஸ்கேன் எடுப்பவரும்  என்னை பிலெட் டெஸ்ட் போகச் சொன்னாங்க
அப்படி இப்படின்னு ஒரு ரிப்போர்ட் ரெடி செஞ்சாங்க
ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர் என்ன அட்மிட் பண்ண ரெடியா இருங்கன்னு சொன்னாங்க
அட்மிட் பண்ண இடத்தில 
அட்மிஷன்க்காக வரிசையில் நிற்கச் சொன்னாங்க
அட்மிஷன் பண்ண பிறகு
சும்மா ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று வந்து பார்த்தாங்க
பார்த்தவங்க எல்லாரும் ஊசி வந்து போட்டாங்க
மருந்து வாங்க எங்க அப்பாவ
 மருந்து கடைக்கு போக சொன்னாங்க
மருந்துக்கடையில் மருந்து சீட்டு கொடுத்தாங்க
மருந்துச் சீட்டு பார்த்தவங்க என் அப்பாவை 
ஏற இறங்க பார்த்தாங்க
பணத்தில் மிதக்கும் மருந்துகளும் என் அப்பாவின் பணத்தை கரியாக்கின
விட்டுட்டு போனவங்க வர்றதுக்கு முன்னே
நான் என் படுக்கையில் 
விறகாய்கிடந்தேன் சடமாக!
பிணமாய் கிடந்த என்ன வீதியில் இருந்தாங்க
அந்த உடலையும் வாங்க எங்க அப்பா காசு கொடுத்தாங்க
நான் பிணமாய் கிடக்க 
என் அப்பாவும் தனிமையில் இருக்க 
என் உடலை தகனம் செய்த பிறகு தான் தெரிந்தது
 எனக்கு இருந்தது வெறும் வயிற்று வலி என்று....!
வயிறு வலி என்று வந்தவனை மருத்துவ முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் அரசியல்வாதிகளின் வயிற்றை நிரப்ப
அப்பாவி மக்களை நோயாளிகளாக்கி 
சடமாய் மாற்றி விடுகின்றனர் லாபத்திற்காக
மனிதனுக்காக மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறி
 மருந்துக்காக மனிதன் என்று உருவாக்கிவிட்டு மனிதனே இல்லாத மருத்துவம் பார்க்கின்றனர் மருத்துவர்கள் என்ற பெயரில்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close