நீங்காத நினைவுகளுடன் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

சனி, 26 ஜூன், 2021

நீங்காத நினைவுகளுடன்


 நம் வாழ்வின் ஓட்டத்தில் கடைசி வரை நம்முடன் வருவது நினைவுகள் மட்டுமே அதை பற்றிய வரிகள் இதோ!

விவரம் தெரிந்த பின்பு
குழந்தையாகவே இருக்க விரும்புகிறோம்
பள்ளி படிப்பின் மத்தியிலே
பள்ளி படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு
சுற்றித்திரிந்த பருவத்திற்க்கு போக விரும்புகிறோம்,
இளமை பருவத்தை அடைந்து
கல்லூரி வாழ்க்கை வந்தபிறகு
பள்ளியில் படித்த காலத்தினை ஏக்கத்துடன்
நினைத்த பார்த்தும்
மீண்டும் பள்ளி‌ பருவத்திற்கு போக விரும்புகிறோம்
வேலைக்கு சென்ற பிறகு
கல்லூரி பருவத்திற்க்கு செல்ல விரும்புகிறோம்
ஓர் இளைஞன் கனவாக மாறிய பிறகு
ஓர் இளைஞி மனைவியாக மாறிய பிறகும்
கனவன் மனைவியாக பழைய பருவத்தை
பகிர்ந்து கொள்கிறோம் ஏக்கத்துடன்!
குடும்பம் என்ற உறவை அடைந்த பிறகும்
பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் நேரத்திலும்
பிள்ளைகளுக்கு சிறந்த தொலைத்த பருவத்தையும் அவழுடன் எடுத்துக் கூறுகிறோம்
பிள்ளைகளும் குடும்பஸ்தனாக மாறிய பிறகும்
பேரன் பேத்திகளை நெஞ்சிலே சுமந்த பிறகும் தனிமையில் இருக்கும் சிலருக்கும்
 தனிமையேவாழ்க்கையாக இருக்கும் பலருக்கும்
 தேடிய பணமும் பெற்ற செல்வத்தையும் விட இன்பம் கொடுக்கும் பருவமாக 
ஏக்கத்துடன் மனதில் அசைத்து பார்க்கிறோம்
நம் இளமை பருவத்தினை!
தொலைத்த நிமிடங்களும்
 மறந்த நண்பர்களும் மகிழ்ந்த கணங்களும் 
வாழ்க்கை அனுபவங்களாக மாற 
விழிதிறந்து பின்புதான் தெரிந்தது
இவை அனைத்தும் நான் கண்மூடி சிந்தித்த
 என் மனதின் வார்த்தைகளென்று......
எட்டிப் பறிக்க முடிந்த கனிகளும் 
எட்டிப் பிடிக்க முடியாத நொடிகளும் 
நினைத்து மட்டுமே பார்க்க முடியும் சில தருணங்களும்
இறுதிவரை ஏக்கத்துடனே
 நினைவுகளாய் தங்கிவிட்டன நம் மனதிலே
நினைவுகளும் நிஜமாகதா என
அற்ப ஆசைகளுடன் ஏங்கி வாழ்கிறோம்,
சாமானிய மனிதர்களாக!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close