ஏமாளியாக ஏமாற்றுகிறோமா - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஏமாளியாக ஏமாற்றுகிறோமா

விடியலைக் காண காத்திருக்கும் மனிதர்களுக்கு
சிலநேரங்களில் விடியல்தாமதமாக வந்து அதிகாலையை ஏமாற்றுகிறது
பத்துமாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை பத்து மாதம் பிடிக்காமல் 
ஏழு மாதத்தில் பிறந்து 
தாயின் கருவறையை ஏமாற்றுகிறது!
குழந்தையின் மழலை பருவத்தில் 
தன் சுட்டிதனத்தை மறைக்க  மழலை மொழியில் சிரித்துப் பேசி ஏமாற்றுகிறது
சிப்பிக்குள் இருக்கும் முத்து போல
வளரும் பருவத்தில் தன் ஆசைப்பட்டதை வாங்க வேண்டும் என தன் தந்தையிடம் 
வாய் கூசாமல் பொய் சொல்லி தந்தையினை ஏமாற்றுகிறது

இளமைப் பருவத்தில் ஆடம்பரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமென கல்வியை ஏமாற்றுகிறோம்
தன் கடமைகளை செய்யாமல் சோம்பேறித்தனமாக இருந்து 
சாக்குப்போக்குச் சொல்லி வாழ்க்கையை இலக்கினை ஏமாற்றுகிறோம்
சிலர் உதவி என்று கேட்பவரிடம்
 முகம் சுளிக்க முதுகுப்புறமாக பேசி சில்லறையாக பிச்சைப்போட்டு ஏமாற்றுகிறோம்
திருட்டு உலகில் பிறந்து
பிறருக்காக நடிகனாகவோ ,நடிகையாகவோ வளர்ந்து
எனக்கு மட்டும் உணவு இருந்தால் போதுமென
சுயநலமாக இருந்து
அரசின் சலுகைகளை பெறுவதற்க்காகவே
அவசராமகவே இலட்சம் கொடுத்து
போலி சான்றிதழ்களையும் வாங்கி
பிறரின் இடத்தையும் பறித்து
அரசாங்கத்தை ஏமாற்றிகிறோம் என எண்ணி நம்மை நாமே ஏமாற்றுகிறோம்
பிறக்கிறோம் ஏமாளிகளாக வளரும் சாமானியனாக படிக்கிறோம் அறிவிலியாக உழைக்கும் படித்த அடிமைகளாக 
சமுதாயத்தில் வாழ ஆரம்பிக்கிறோம் பிறரை ஏமாற்றும் ஏமாளிகளாக
வயது முடிந்தவுடன் வீசப்படும் குப்பை காகிதமாக!
ஏமாற்றுகிறோமா ஏமாளிகளாக அரசாங்கத்தை! இல்லை!!!!!
 ஏமாற்றுகிறதா அரசாங்கம்
 நம்மை ஏமாளிகளாக வைத்துக்கொண்டே!!! சிந்தித்துக்கொண்டே முடிக்கிறேன் புள்ளியுடன்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close