நான்கு வயதிற்குள் பேசி விளையாடாத குழந்தையோ!
எட்டில் வளையாத பிள்ளையோ!
பன்னிரெண்டில் விழாத பல்லோ
பதினாறில் படிக்காத பிள்ளையோ!
இருப்பதில் தேடாத வேலையோ
இருபத்துநான்கில் பெறாத உலக அறிவோ;
இருபத்துஎட்டில் முடிக்காத திருமணமோ
முப்பத்து இரண்டில் பெறாத குழந்தையோ;
முப்பத்து ஆறில் தேடாத செல்வமோ!
நாற்பதில் கிடைக்காத அனுபவமோ;
நாற்பத்து நான்கில் சுற்றிதிரியாத ஊரோ;
நாற்பத்து எட்டில் தேடாத பக்தியோ
ஐம்பத்து இரண்டில் போகாத கோயிலோ;
ஐம்பாத்தாறில் கிடைக்காத ஓய்வோ;
அறுபது வயதில் சுமக்காத பேரன் பேத்திகளையோ;
அறுபத்து நான்கில் சொல்லிக் கொடுக்காத அனுபவமோ!
அறுபத்தெட்டு வயதில் கிடைக்காத அரவணைப்போ;
எழுபத்திரண்டு வயதில் பெறாத தனிமையோ: கிடைக்கும் நேரத்தில் எதுவும் கிடைக்காவிட்டால்
பிறகு கிடைத்து என்ன பயன்!
கிடைக்காததை தேடிக்கொண்டு
கிடைப்பதை விட்டுவிடுகிறோம்
தேடலையே வாழ்க்கையாக கொண்டு....!
நான்கு மாதகருவில் ஆரம்பித்து
நான்கு பேர் முடிவில் சுமக்க:
இறுதியில் நம் மரண வாழ்க்கை தேடிக்கொண்டு புதைகுழியில்
முடிகிறது தேடலே வாழ்க்கையாக!
For hear audio please click below 👇👇👇👇⬇️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக