மௌனத்தின் வார்த்தைகள் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

மௌனத்தின் வார்த்தைகள்

மலைகளும் காடுகளோடு பேச
காடுகளும் தென்றலோடு பேச
அந்த தென்றலும் காற்றாய் வீச
கடல் அலைகள் ஒன்றோடு ஒன்று மோதி இரைச்சலாய்ப் பேச
ஓடுகின்ற நீரோடையும் படபடவென்று பேச
கொட்டுகின்ற அருவியும் ஆர்ப்பரித்து பேச
பெய்கின்ற மழையும் நிதானமாய் பேச
ஊரசுகின்ற மேகங்களும் முழங்குகின்ற இடியாய் பேச;
முழங்குகின்ற இடியும் மின்னலாய் பேச
விண்மீன்களும் விட்டுவிட்டு பேச
நிலவும் குளிர்ந்த காற்றாய் பேச
இரவும் நிசப்தமாக பேசும் வேலையிலே
மனிதனும் பேசுகின்றான்

சில நேரத்தில் ஆசை வார்த்தைகளாலும்
சில நேரத்தில் கோபமாகவும்
சில நிமிடங்களில் பொறாமையாகவும் பேராசைக்கொண்வர்களாகவும்
சில நொடிகளில் நல்லவனாகவும் பேசுகிறோம்
எல்லா நிமிடங்களிலும் வாய்மொழி வார்த்தைகள் மட்டுமே பேசுவதில்லை
சில கணங்களில் மௌனமும் ...
அன்பு புரிந்துகொண்ட இதயங்களுக்கு மத்தியில் கண்களும் பேசுகின்றன
சண்டைப் போட்டுக் கொள்கிற இடத்தில்
 சிலர் ஊமைகளாகவும்
அதிகம் சிந்திக்கும் மனிதர்கள் அமைதியாகவும்
ஒரு மனிதனின் இறப்பு சடங்கிலும் 
மனது நிம்மதியை தேடும் வேலையிலும்
குழப்பத்தின் மத்தியில் ஏதோ ஒன்றைத் தேடும் வேளையிலும்
ஆறுதலுக்காகவும் உதவிக்காகவும் பிறரை எதிர்பார்த்து நிற்கும் வேளையிலும்,
இரவலுக்காக கையேந்தும் வேலையிலும்,
சிலரின் ஏமாற்றங்களும்                        நம்பிக்கைத் துரோகங்களும் அனுபவிக்கின்ற வேளையிலும்,
வாழ்க்கையில் துன்பப்படும் வேலையிலும்
நாம் பேசுவது..
வாய்மொழி வார்த்தைகளால் அல்ல மௌனத்தின் வார்த்தைகளாலே
இயற்கை எனும் மந்திரத்திலே 
மௌனத்தை தன் தந்திரமாய் வைத்துக்கொண்டு 
அந்த தந்திரத்தை ஆயுதமாகவும்
அந்த ஆயுதம் பேரழிவுகளாகவும் பயன்படுத்தும் இயற்கையும்
தன் மனதின் வார்த்தைகளைக் கூறுவது மௌனத்தினாலே தான்!
மடை திறந்த வெள்ளம் போல் பேசுவதைவிட மௌனத்தின் வார்த்தைகளால் சிந்தித்துக்கொண்டே முடிக்கிறேன் இத்துடன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close