விழி திறந்து விடியில் வருமுன் எழுந்து
வீட்டின் செல்லப் பிள்ளையை மார்பில் சுமந்து,
வீதியிலே வளம் வரும் தேவதையோ
தாலாட்டும் தாயின் அன்பும்
தன் பிள்ளையை தட்டிக்கொடுக்கும் அன்பின் வடிவமோ!
தன் தாயினை விட்டுக் கொடுக்காமலும் தாரத்தையும் விட்டுக் கொடுக்காமலும்
சண்டை வரும் நேரத்தில்
தள்ளாடும் குடும்பத்தை தாங்கும் பூமியின் தேவதையோ!
குடும்பத்தில் மனைவி பிரச்சனையாக
அந்த பிரச்சனையை சமாளிக்க
தட்டுத்தடுமாறி எந்த பக்கம் செல்வதென தெரியாமல்
தாயா! தாரமா! என
தன் குடும்பத்தின் பிரச்சினை எனும் குளத்தில்
நீச்சல் அடிக்க முடியாமல் தவிக்கும் குழந்தை தெய்வமோ!
இல்லறத்தில் இன்பம் காண
தன் மனைவியை புகழ்ந்து தள்ளும் இந்திரனின் துணைவணோ!
குழந்தை எனும் செல்வம் கொண்டு
அதை தன் மார்பில் கொண்டு
சில நேரத்தில் தன் தொப்பை வயிற்றையும் குழந்தைக்காக விளையாட்டுத்திடலாக மாற்றியும்
அந்தக் குழந்தையை தூங்க வைத்த தன் வாழ்வின் துன்பத்தையும் அனுபவத்தையும் சில பொய்க் கதைகளாக
சித்தரித்து சொல்லி தூங்கவைக்கும் அரவணைப்பின் தெய்வமோ!
மங்காத மலர்போன்ற வெயிலிலும்
மணல் கலந்த காற்றும் வீசும் மழையிலும்
தன் வாழ்வில் இழந்ததை
தன் பிள்ளையும் இழக்கக்கூடாதென
தியாகத்தின் வியர்வை துளிகளும்
இரத்தத்தின் கண்ணீருமாக
உடம்பில் வழிய
வேலை பார்க்கும் இடத்தில் விதியே என பிடிக்காத வேலையை பார்க்கும் நேரத்திலும்
பலவிதமான துன்பங்களும் மனதை
பதம் பார்க்க,
பிள்ளையை படிக்க வைக்க
பெரிய ஸ்கூலில் சேர்க்க வேண்டுமென
பெரிய ஃபார்ம் வாங்கி ஃபில் பண்ணா
பெருசா டொனேஷன் கேட்டாங்க
அதையும் கட்டிப்புட்டு
பெரிய ஸ்கூல்ல பிள்ளை படிப்பது நினைத்து சந்தோஷப்பட்டா!
அங்க படிக்க பெருசா ஒன்னும் இல்ல
அது இதுன்னு சொல்லி பணம் மட்டும் கேட்டாடங்க
பீஸ் கட்ட முடியாமல் பிள்ளையை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க
அழுதுகிட்டே பிள்ளை வீட்டிலிருக்க
அலண்டு போய் இருந்த என் கண்ணை தொடைக்க
என் கண்ணீரும் என் பிள்ளைக்கு
பணமழையாய் தெரிகிறது,
வளர்ந்து பிள்ளையை தோள்மேல் பலமாக தட்டிக் கொடுக்க
வளர்த்த பிள்ளையும்
விரோதி போல் பார்க்கிறான் எண்ணி புரிந்துகொள்ளாமல்
பெண் பிள்ளையை திருமணம் முடிக்க
படாத கடன்பட்டு திருமணம் முடித்தால்
கல்யாணம் பண்ண அவள்
நான் கண்ணிமையில் வளர்த்தவள்
கண்ணாடி பிம்பமாய் என்
கண்முன்னே தெரிகிறாள் -நான்
கண் மூடும் நேரத்தில் தான் வருவாளோ என!
திருமணம் ஆன பிறகு
தானும் தந்தையாய் மாறும் தருணத்தில்
உணர்கிறான்
அவன் உணரும் நேரத்தில்
அவனோடு இருப்பது சுவற்றில் இருந்த
அவன் தந்தையின் உருவப்படம் மட்டுமே கண்ணீர் முத்துக்களாய்....
சிப்பி போல் சிரித்துக்கொண்டே யோசிக்கிறான் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தந்தையும் ஒரு ஆண் தேவதைகளான அப்பா என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக