பல ரகசியங்கள் அனைவருக்கும் உண்டுஅந்த இரகசியங்களைப் பற்றி ஒரு சில வரிகள்
விண்மீன்களுக்கு அது தரும் ஒளி இரகசியமோ
வானத்திற்க்கு அதன் முடிவிலா தொலைவு இரகசியமோ!
காற்றுக்கு அது மறைத்துப் தரும் தென்றல் இரகசியமோ
காடுகளுக்கு அது தரும் நிழல் இரகசியமோ!
கடலுக்கு அதன் இரைச்சல் இரகசியமோ!
மலைகளுக்கு அதில் உள்ள உயிரினங்கள் இரகசியமோ!
மேகங்களுக்கு மழை இரகசியமோ!
மழைக்கு அதன் தனித்துவமான சுவை இரகசியமோ!
பறவைகளுக்கு தன் இருப்பிடம் இரகசியமோ!
பாம்புகளுக்கு தன் விஷம் இரகசியமோ!
விலங்குகளுக்கு தன் வலிமை இரகசியமோ!
விடியலுக்கு காலையில் வரும் சுரியன் இரகசியமோ!
சூரியனுக்கு அதன் பிரகாசம் இரகசியமோ!
சந்திரனுக்கு அதன் குளிர்ச்சி இரகசியமோ!
பூமிக்கு தன் இயற்கை அழகு இரகசியமோ!
மனிதனுக்கு எதுதான் இரகசியமோ!
பலருக்கு தன் ஆசையில் இரகசியமோ!
சிலருக்கு தன் பெருமையில் இரகசியமோ!
பலருக்கு புதையலிலும், பயணத்திலும் இரகசியமோ!
சிலருக்கு நண்பர்கள் தான் இரகசியமோ
சில நேரத்தில் தட்டிக் கொடுத்தும்
பல நேரங்களில் ஆறுதல் சொல்லியும்
சிந்தித்துக்கொண்டே கவலைகளை போக்க செய்யும்
வாழ்க்கையில் துணையாய் இருந்து வழிகாட்டியும்
கேளி கிண்டலுடன் வாழ்க்கையை சித்திரமாய் மாற்றியும் தரும்,
நண்பன் எனும் கள்ளிப்பழமோ!
காலம் கடந்தால் கிடைக்காத நிமிடமும்
காலம் கடந்து சிந்திப்பதும்,
காலம் தரும் நண்பர்கள் தான்
பலருக்கு என் இனிய இரகசிய
டைரியோ!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Arumayana pathivu da ragasiyangalin thokupu 😍😍😍😍
பதிலளிநீக்கு