தமிழரின் பொங்கலோ பொங்கல் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

சனி, 15 ஜனவரி, 2022

தமிழரின் பொங்கலோ பொங்கல்

 தை மாதம் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாளாம்
உழவரின் பெருநாளாம் அதுவே திருவள்ளுவரின் பெருநாளாம்;
தமிழரின் உணர்வை ஜல்லிக்கட்டிலும்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்திலும்
தரணியெங்கும் பரப்பும் நாம்!
தமிழரின்  பண்பை மறந்து
தமிழனாக வாழ்கின்றோமா!
தமிழரின் புத்தாண்டு தை மாதமா
 சித்திரை மாதமா என சிலர் குழப்பும் வேலைகளிலும்- எந்த மாதம் 
தமிழ் புத்தாண்டு என தெரியாமலேயே கொண்டாடும் தமிழர்களாகவும்;

ஏதோ ஒரு திருவிழாக்களுக்கு மட்டும் குடும்பத்தை தேடும் தமிழீனமாகவும்;
சமூகத்தில் பெண்ணை மட்டுமே இழிவுசொல்லி ஆண் பிள்ளைகளுக்கு எது பண்ணாலும் தட்டிக்கொடுக்கும் தமிழினமாகுவும்;
பெண் சுதந்திரம் என வாய் வார்த்தைகள் மட்டுமே சொல்லிக்கொண்டு
பெண்களை கண்களிலே கற்பழிகும் தமிழ் இனமாகவும்!
மனிதன் இல்லாத வஞ்சகம் வைத்துக்கொண்டு மற்றவரிடம் பேசும் தமிழ் இனமாகவும்
பிறரின் துன்பத்திலும் வறுமையிலும் இன்பம் காணும் தமிழர்களாகவும்;
பிறரை தாழ்த்தி பிறப்பில் உயர்வு காணும் தமிழர்களாகவும்
இயற்கை சீற்றங்களின் போது  வெளிப்படும் மனிதன் நிறைந்த தமிழர்களாகவும்!
வாழ்கின்றோமா?


மனதில் மகிழ்ச்சி பொங்க!
 வாழ்வில் நிறைவு பொங்க!
 இனிப்பாய் இன்பம் பொங்க!
 துன்பமெல்லாம் கரும்புகளாக தித்திப்பாக மாறும் 
வாய்வார்த்தைகளில் அரசை குறை சொல்லும் தமிழீனமாக இல்லாமல்!
மனிதம் நிறைந்த சமூகமாக 
மகிழ்ச்சி எல்லா இல்லங்களிலும் என்று பொங்குகிறதோ!
அன்று தான் உண்மையான பொங்கலோ பொங்கலோ!
விடைதெரியாமல் கேள்வியுடனே முடிக்கிறேன் பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close