தெருக்களின் ஓரத்திலே
தெளிவாக எரியாத விளக்கின் ஒளியிலே
கிழிந்துகிடக்கும் சுவற்றின் விளம்பரம் போல
கந்தலான ஆடைகளும்
கரையும் காகமாய் உணவை தேடுகிறோம்
வழியில் வருபவரிடம் கையேந்துகிறோம் காசுக்காக அல்ல !
காய்ந்து கிடக்கும் எங்களின் வயிற்றை நிரப்புவதற்காக!
கழிவு நீரும் சில நேரங்களில் குடிநீராகவும்
சாலையின் ஓரங்கள் எங்களுக்கு படுக்கைகளாகவும்
சாக்கடையின் மனம் எங்களுக்கு நறுமணமாகவும்
சாலையில் வேகமாக கடந்து செல்லும் வாகனங்கள் எங்களுக்கு தென்றலாகவும் மாறுகின்றன
எங்களின் கருப்புத் தோல்களே எங்களுக்கு விலை உயர்ந்த சட்டைகள்
சாலையின் புழுதிகள் சில நேரங்களில் தலையனையாகவும்
புழுதியில் மிதக்கும் செய்தித்தாள்கள் எங்களுக்கு போர்வைரகளாகவும் மாறுகின்றன;
நாட்டில் எந்தவொரு உரிமையும்
அகதிகள் என்றும் சொல்லவும் முடியா மண்புழுக்களுக்கு கீழே மதிக்க தகுதியில்லா மனிதர்களாக வாழ்கின்றோம்!
அடுத்தவேளை உணவு உண்ணவே
பிறரை எதிர்பார்க்கும் வேளையிலே பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து
இரத்த கண்ணீர் வடிக்கின்றோம்
எங்களின் பருவப் பெண்களும்
சமூக விரோதிகளின் வெறியாட்டத்தில் ஆட்டுக்குட்டி போல் தவிர்த்திட!
புத்தி அற்றவர்களாக புகார் கொடுத்தால்
புகார் கொடுத்தவர்களை
புத்தியுள்ளவர்கள் அடிக்கின்றனர்
புத்தி இல்லாதவர்கள் போல
அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடிபணிந்து!
மனம் வெம்பி அழுதிட
கண்ணை மூடினால்
என்னுடன் கண்ணை மூடிய என் குடும்பம்
நான் கண் விழிக்கும்போது
சொகுசு கார் சக்கரத்தின் அடியில் பிணமாய் கிடைக்கின்றனர்
நாட்டின் அடிப்படை உரிமை கூட இல்லாத எங்களை யாரும் கவனிக்கப்போவதில்லை
நாதியற்று அழுகும்
எங்கள் கண்ணீரும் வியர்வைத் துளிகளும் கலந்து ரத்தமாய் வழிகின்றது
என் பிள்ளையின் மண்டை ஓட்டில்..
சாலையின் ஓரத்தில் வீசும் குப்பைகளுக்கு மத்தியில்
எங்கள் பிணங்களும் ஈக்களுக்கு விருந்தாகின்றன
சாலையின் வேடிக்கை பார்க்கும் நேரத்தில் எங்களையும் பாருங்கள்
எங்கள் கண்ணீரும் உங்களுக்காக வாழ்த்து கூறுமே!
இப்படிக்கு சாலையின் குப்பைத்தொட்டி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக