வீதியில போனவங்களுக்கு விருந்து போட்டு மகிழ்ந்தாங்க
வீட்டில கூடி திண்ணையிலும் சிரிச்சாங்க
விருந்துக்குப் போனவங்களுக்கு சோறு போட்டு மகிழ்ந்தாங்க
விட்டுட்டுப்போகும் போது மனம் நொந்து புலம்புவாங்க;
பிரச்சினையினு வந்தா ஒன்றுகூடி இருப்பாங்க
பாசமென்னும் வந்தா கடலையும் அளப்பாங்க
கண்மூடித்தனமாய் கடவுளையும் நம்புவாங்க!
கண்நிமிர்ந்து பார்த்தால் இழிவாக பேசுவாங்க!
கணவாக கல்வியும் மாறினாங்க
கட்டிய கணவன் தெய்வமாகவும்
காலமெல்லாம் அடுப்பங்கரையே
கோவிலாகும் வாழ்ந்தாங்க!
மானத்தையும் வீரமான சேலையாகவும்
மார்பு மேலே அணிந்தாங்க!
மவுனமே சண்டையிடும் ஆயுதமாகவும்
மழலை முடியாத வயதிலும்
மழலையான குழந்தையை தாங்கி
மரகதம் போல் குடும்பத்தின் சொத்தாக இருந்தாங்க! அன்றைய தமிழச்சி..!
இன்று வீதியில் போறவனே திருடனோயென
எட்டியும் பாக்குறாங்க!
வீட்டில் கூடிப் பேச திண்ணையும் இல்லை
இப்போது கூட்டமாக உட்கார்ந்து பேச மனமும் இல்லை
விருந்துக்குப் வந்தவர்களை
வீட்டை விட்டு போவிங்கலாலெனவும் கேட்ப்பாங்க!
பிரச்சினை என்று வருந்தா
கண்ணையும் பொத்திக்குவாங்க;
அடுத்தவன் கதையை திரிச்சியும் பேசுவாங்க
அழமான உண்மையை பொய்யாகவும் மாத்தும்
பெண்களும் உண்டோ!
பெண்மைக்கு இலக்கணமாகவும் பெண்ணியத்தை மூச்சாகவும் கொண்டவரும் உண்டோ!
அழகை இலக்கணமாகவும்
சூழ்ச்சியை வாழ்க்கையாகக் கொண்டவர்களும் உண்டோ!
கிளெப்பிலும் மதுவிலும் விசித்திரமாக புகைப்பிடித்து இரசிப்பவர்களுக்கு உண்டோ?
இன்று கடமையிலும் குடும்பத்தை தாங்கி கல்மனதை கொண்ட
பெண்களும் உண்டோ!
மாடர்ன் உடையில் கண்ணியமாக இருப்பவரும் உண்டோ!?
அந்த மாடல் உடையால் கவர்ச்சியை காட்டுபவரும் உண்டோ!
காதலை காவியமாக நினைப்பவரும் உண்டோ?
அந்தக் காதலை காமத்திற்க்காக பயன்படுத்துபவரும் உண்டோ!
உதடுகளில் சாயமும் கண்களில் மையும் போடுபவரும் உண்டோ!
உள்ளங்கையில் உலகையும் கண்களில் கோபத்தை நெருப்பாகக் கக்கும் கண்ணகிகளும் உண்டோ!
வேகமாக ஓட்டத்தில் நாகரீக பேயான
நாகரிக உலகின் நாகரீக மாயையான
நவீன தமிழச்சி ....
நீதியின் தேவதையின் மானத்திற்கு விற்க்கபடுகிறால் என்பதால் என்னவோ
நீதி தேவதையின் கண்கள் எப்பொழுதும் கட்டப்பட்டுள்ளனவோ!
நீங்காத கேள்வியாய் விடையை
உங்களிடம் விட்டுவிடுகிறேன் இத்துடனே....!
மிக்க அருமையான கருத்து எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் வெளியுட்டுள்ளீர்கள்
பதிலளிநீக்கு🙏
பதிலளிநீக்கு