கணவனை இழந்த அவள்
கண்ணீரில் தழுவுகிறாள்
கனவுகளை தொலைத்த அவள்
பிள்ளையின் கணவுக்காக ஓடுகிறாள்
படித்தவள் என்றால் பட்டத்துடன் திரிவாள்
பாவம் இவள்! படிக்காத மங்கைதானே
பிள்ளை புத்தகப்பை தூக்குவதற்கு
இவள் மண்வெட்டியை தூக்குகிறாளோ
தன் குழந்தையின் புண்ணைகையால் மறந்துபோகுமோ!
வேலையிலே தோலை உரிப்பது போல்
பார்ப்பவர்கள் மத்தியிலும்
என் வியர்வை குடிக்க நினைப்பவர்களின்
மத்தியிலும்
என் பிள்ளைக்காக என்று நினைத்தாலே
மின்மினிபூச்சியாய் மனமும் மகிழுமோ
வாடிய முகத்துடன் வாட்டாமாகயிருந்தால்
வந்து கட்டியணைக்கும் பிள்ளையுடனே பறந்தோடுமோ
பிறரின் கனவுகளை
தன் தலையில்......
சுமைகளாக தாங்குகிறாள்
இவளின் தலை சுமையை இறக்க பலருண்டு
அவளின் கனவை நினைவாக்க
யாருண்டு?
பிறருக்கு இமைகள் மயங்கும் நவீன உலகம்தானோ
இவள் தலையில் எப்போதும் கற்காலம்தானோ
பிள்ளையின் கனவை தொடர
இன்று செங்கல்
நாளை என்ன என்று யோசிக்கும்
சித்தாளோ இவள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக