பூமியானது தன்னையே சுற்றி வரும் இயல்போ!
பூமி மட்டும் தான் உயிரினம் வாழும் கிரகமோ
என்று பிறரை நினைக்க வைத்ததுஅதிகாரமோ
மரங்களின் ஆடும் கிளையோ !
அதனால் வரும் காற்றின் மனமோ !
தென்றலாக வீசும் மூங்கில் இசையோ!
தென்றல் மீது மரங்கள் காட்டும் அதிகாரமோ..
மரங்களினால் அடித்துச் செல்லப்படும் மேகமோ அதுவே வானத்தின் கூரையோ
அந்தக் கூரையினால் உண்டாகும் இடியோ
அல்ல இடியின் நண்பனான மின்னலோ
மின்னல் மீது மேகம் செலுத்தும் அதிகாரமோ
மேகத்திலிருந்து வரும் மழையோ
அந்த மழைக்கு நடனமாடும் இலையோ
அந்த இலையிலே உறங்கும் மழைத்துளியோ மழை நின்ற பிறகும் கண்ணீர் வடிக்கும் இலையின் அதிகாரமோ!
சூழ்ந்த கடலின் இரைச்சலோ
இரைச்சலின் ஆழமோ
அந்த ஆழத்திலே வாழும் அற்புத உயிரினமோ அந்த உயிரினங்களை உணவாக்க வேட்டையாடும் மீனவனின் அதிகாரமோ!
மீனவனை ஏமாற்றும் வியாபாரியோ விவசாயிகளை கைவிடும் அரசோ
அரசையும் வியாபாரியும் கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டின் அதிகாரமோ;
மக்களை ஏமாற்றும் அரசியலோ
அரசியல் நடத்தும் அரசியல்வாதியோ அரசியல்வாதியை அடிபணிய வைக்கும் பணமோ
அரசு இயந்திரம் என்று சொல்லும் அதிகாரிகளோ
அந்த அதிகாரிகளையும் வாங்கும் இலஞ்சமோ
இலஞ்சத்திற்க்கு அடிப்படையாக இருக்கும் பணத்தின் அதிகாரமோ;
அன்பின் வெளிப்பாடான காதலும் அந்த காதலின் மறைந்திருக்கும் காமத்தின் அதிகாரமோ;
பிள்ளையின் மீது அன்பு காட்டும் அன்னையோ தட்டிக் கொடுத்து அரவணைக்கும் தந்தையோ தன் பிள்ளை மீது கொண்ட அதிகாரமோ;
பணம் சம்பாதிக்க ஓடும் நடுத்தர மக்களோ நடுத்தர மக்களை வாட்டும் கடன் சுமையோ அந்தக் கடனை கட்ட முடியாமல் படும் தொல்லையோ
தொல்லையே வேண்டாம் என்று நினைக்கும் போது வயதாகிய மனிதனோ
இதையெல்லாம் கட்டுப்படுத்தும் நேரத்தின் அதிகாரமோ
ஏன் என்று கேள்வி கேட்பது அதிகாரமோ? இல்லை கேள்வி கேட்கவிடாமல் செய்வது அதிகாரமோ?
கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக