எதையும்‌‌ தாங்கும் இதயம் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

எதையும்‌‌ தாங்கும் இதயம்

பூமிக்கு சூரியன் சுமையோ
சூரியனுக்கு ஒன்பது கோள்களும் சுமையோ
நிலவுக்கு அதன் ஒளி சுமையோ இல்லை
 அதை கானும் மனிதனின் கண்கள் சுமையோ
காற்றுக்கு தென்றல் சுமையோ?
மரங்களுக்கு அதன் இலைகள் சுமையோ     இலைகளுக்கு அதில் உறங்கும் பனித்துளிகள் சுமையோ?

வானத்திற்கு மேகம் சுமையோ!
 மேகங்களுக்கு அது தரும் மழை சுமையோ
கடல்களுக்கு அதன் அலை சுமையோ!
அலைகளுக்கு அதன் இரைச்சல் சுமையோ
 கர்ப்பிணிக்கு தன் கரு சுமையா‌ இல்லை
அந்த கருவை பெற்றெடுக்கும்போது வரும் வலிதான் சுமையோ
பிள்ளைக்கு தன் தாய் சுமையோ
தாய்க்கு தன் பிள்ளையை நினைத்து வடிக்கும் கண்ணீர் சுமையோ
 தந்தைக்கு தன் மகன் சுமையா இல்லை
மகனுக்கு தன் தந்தை சுமையோ?
படிக்கும் பிள்ளைக்கு தன் கல்வி சுமையோ!
இல்லை அதை கற்றுத்தரும் ஆசிரியர் சுமையோ
ஆசிரியருக்கு தன் குடும்பம் சுமையோ இல்லை அதனால் வரும் துன்பங்கள் சுமையோ?
பள்ளிக்கு மாணவர்கள் சுமையோ இல்லை மாணவர்களால்  வரும் பிரச்சனை தான் சுமையோ!
படிப்புக்கு புத்தகங்கள் சுமையோ இல்லை படிப்புக்காக கட்டப்படும் காசுதான் சுமையோ!
வேலைக்காக காத்திருக்கும் இளைஞனின் சுமையோ!
வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் இருக்கும் கார்ப்பரேட்டின் சுமையா இல்லை
கிடைத்த வேலை புடிக்காததினால் வந்த சுமையோ!
விவசாயத்திற்கு தண்ணீர் சுமையோ இல்லை தண்ணீரினால் மூழ்கும் வீட்டினால் சுமையோ
சாமனியனுக்கு கடன் சுமையோ
ஏழைக்கு உணவுதான் சுமையோ
சாலையில் வசிப்பவனுக்கு இருப்பிடம் சுமையோ
இருப்பிடம் ‌உடையவனுக்கு கிடைக்குமா என்ற சுமையோ
எல்லாம் இருப்பவனுக்கு உறக்கம்தான் சுமையோ
ஒருவனுக்கு உறவுகளினால் சுமையோ
மற்றொருவருக்கு உறவே இல்லாதது சுமையோ
நேரம் கொண்ட இளைஞனுக்கு பணம் சுமையோ
பணம் கொண்ட முதியவனுக்கு நோய்கள் சுமையோ
இல்லை நேரம் இல்லாதது சுமையோ?
கவலையில் இருப்பவனுக்கு வாழ்க்கையே சுமையோ
விரக்தியில் இருப்பவனுக்கு மரணமும் சுமையோ
விதியை நம்புகிறவனுக்கு அறிவியல் சுமையோ
அறிவியலை நேசிப்பவனுக்கு அவனது முயற்சியில் சுமையோ
முயற்சியற்றவனுக்கு எல்லாம் சுமையோ!
மகிழ்ந்த இதயம் உடையவனுக்கு எதுதான் சுமையோ..
வாழ்கிறோமா எதையும் தாங்கும் இதயமாக?
For voice over please click the follow links 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close