விழிகளுக்கும் ஓய்வில்லாமல்
பிறர் விழிகள் நிம்மதியாக உறங்க
எங்கள் உறக்கத்தை தொலைக்கிறோம்;
காலையில் உதிக்கும் சூரியனோ
மாலையில் மங்கும் கதிரவனோ
இரவில் இருக்கும் நிலவோ அந்த நிலவொளியுடன் உறவாடும் விண்மீனோ
அந்த விண்மீன்களைப் போலவே
ஆங்காங்கே நாங்களும் இருக்கின்றோம்
விண்மீன்களோ வானத்தை அலங்கரிக்க! நாங்களோ மக்களை பாதுகாக்க!
வீடுகள் உங்களுக்கு உடமையாகின்றன
சில நேரங்களில் எங்களுக்கு எங்கள் உடைகளே வீடாகின்றன
நீங்கள் உங்கள் உறவுகளுடன் கொஞ்சி மகிழும்போது
நாங்கள் எங்கள் உறவுகளை ஏக்கத்துடனே நினைக்க மட்டுமே முடிகிறது
உங்கள் உறவுகளின் சந்தோஷங்களை பார்க்கும்பொழுது
எங்கேயாவது எங்களது உறவுகளும் சந்தோஷமாக இருக்கும் என நிம்மதியாக வேலை பார்க்கிறோம்
கடிகாரத்தில் முள் போல !
சாலை சிக்னலில் நின்றும்
அரசு அதிகாரிகளுக்கு பந்தபஸ்து என்ற பெயரில் பின்னாடி ஓடியும்
கள்வர்களை பிடிக்க மறைந்திருந்தும்
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்களாகவும் என பல நேரங்களில் உங்களுக்காகவே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்
எங்களை வெளிகண்ணோட்டத்துடன் மட்டுமே பார்ப்பவர்கள் !
நல்ல வேலை! நல்ல சம்பளம்
நல்ல மாமுல் வாங்கலாம் என்றும் சொல்பவர் பலர் உண்டு -ஆனால்
எங்களுக்கு மட்டும் தான் தெரியும் எங்களின் நிலைமை!
சாலையிலே நிற்கும்போது அவசரமாக இருந்தாலும் அடக்கிக் கொண்டும் அருகிலே காலாவதியான கழிப்பறையில் இடங்களில் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டும் வெயிலில் ஏதோ ஒரு மரநிலையைத் தேடிக் கொண்டும்
தண்ணீருக்காக கடைகளில் ஓரங்களில்
நின்று கொண்டும்
எங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்கிறோம்
கொட்டும் மழையிலும்
அடிக்கும் வெயிலிலும்
நடுங்கும் குளிரும்
எங்களுக்கு போர்வைகளாக மாறுகின்றன
பெண்களுக்கு சில நேரங்களில் பல அச்சஸ்மண்டுகள் என்ற பெயரில் சில கஷ்டங்கள்
பெண்களின் மாத பிரச்சனையாக இருந்தாலும் சரி அந்த நேரத்தில்
வேலையே எங்களுக்கு முதல் பிரச்சினையாக தெரியும்
ஒரே பாலினத்தைச் சேர்ந்த மேலதிகாரியும் புரிந்து கொள்ளாமல்
நாங்களும் இதை கடந்து தான் வந்தோம் என்று அறிவுரை செய்யும் பொழுது
அதை பொறுத்துக்கொள்கிறோம்!
இன்னும் சொல்ல முடியாத வேதனைகளை வைத்துக்கொண்டு நாங்கள் வளம் வருகிறோம் கம்பீரமாக!
எங்களிலும் சிலர் மெல்லிய மனம் உடையவர் உண்டு !
எங்களின் சந்தேக கண்ணோட்டமே பலருக்கு பாதுகாப்பு அரணாக மாறுவதும் உண்டு! எங்களின் துப்பாக்கியும் பல நேரங்களில் பொம்மைகளாகவும்
ஏதோ ஒரு தவிர்க்க முடியாத நேரங்களில் அது துப்பாக்கியாகவும் மாறுவதும் உண்டு எங்களின் வியர்வை துளிகளும் கண்ணீரும் சில நேரங்களில் இரத்தமாகவும் மாறுவதும் உண்டு!
காவல்துறையினரை பற்றி இழிவாகப் பேசும்முன்
எங்களின் கம்பீரமான கண்ணீரும்
சொல்ல முடியாத துயரங்களையும் நினைத்துப்பாருங்கள்
உங்களின் பாதுகாப்புக்காகவே தியாகம் செய்த பல காவல்துறையின் ஒரே ஏக்கமாக இன்று வரை இருப்பது விடுமுறை மட்டுமே
நேர்மையாக வேலை செய்ய ஆசைப்பட்டாலும் நீங்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளினாலே எங்கள் மனசாட்சியை புதைத்துக்கொண்டு வேலை பார்க்கிறோம்
இன்னும் சொல்ல முடியா வார்த்தைகளால் முடிக்கிறேன்..
சொல்லாமல் வாய்க்குழறி தவிக்கிறேன் காவல்துறை உங்கள் நண்பன் என்று முடிக்கிறேன் இத்துடனே!
Tamil voice over hear below
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக