பிறக்கும் குழந்தையின் அழுகுரலோ
அதைக் கேட்கும் தாயின் படுக்கையின் வசதியோ
அதற்காக கொடுக்கும் பணமோ
குழந்தையின் படிப்பிற்காக அலையும் தந்தையோ
நல்ல படிப்புக்காக சொத்தையே விற்கும் அளவுக்கு அளிக்கப்படும் நன்கொடையோ
அரசினர் பள்ளியில் கிடைக்காத கல்வியோ
கார்ப்பரேட்டில் படித்தால்தான்
சமூகம் மதிக்கும் என்ற அந்தஸ்தோ
அதற்காக கார்ப்பரேட் பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் பணமோ
சாதியே வேண்டாம் என்று சொல்லும் சமூகமோ
ஆனால் ஜாதி சான்றுக்கே
அலையவிடும் அரசு அதிகாரிகளோ
அந்த அதிகாரி எதிர்பார்ப்பதும் பணமோ
சாதாரண ஆடைகளில் பிராண்ட் பெயராக மாற
அரைலிட்டர் பாலில் 10 மில்லியை குறைத்து
முதலாளிகளை இலாப நோக்கத்தோடு மாற்றியதும் இந்த பணமோ
சுத்தமான பொருளென மக்களை ஏமாற்றி
மட்டமான பொருளை கலப்படம்
செய்யவைப்பதும் இந்த பணமோ
சில்லரை வியாபாரிகளும் சில்லறை இல்லை எனக் கூறி
ஏதோ ஒரு பொருளை வாங்க வைக்கும்
வியாபார உத்தி தூண்டுவதும் இந்த பணமோ
சாலையே இல்லாத இடத்தில்
சாலை போட்டதாக சொல்லி
அரசியல்வாதியின் ஆசையை
தூண்டச்செய்வதும் இந்த பணமோ
குழிகள் மட்டும் காணும் சாலைகளுக்கு
சாலை வரியும் அதற்காக ஓவர் ஸ்பீடென
சட்டம் போட வைப்பதும் இந்த பணமோ
வேலை தேடி கிடைக்காத போதும்
ஏதோ ஒரு இடத்தில் சிபாரிசு என்ற பெயரில் பிறர் வேலையை
தட்டிச் செல்ல வைப்பதும் இந்த பணமோ
மேலாளர் வேலையை முடிக்க
கார்ப்பரேட்டின் அடிமைகளாகம்
கீழுள்ள ஊழியர்களின் வேலைசுமையை அதிகரிக்க வைப்பதும் இந்த பணமோ
என் வேலை சீக்கிரமே முடிந்தால் போதுமென
குறுக்கு வழியில் சிந்தித்து
அரசு ஊழியர்களை தூண்டவைத்த
இந்த மக்களையை மாற்றியதும் பணமோ
பிறந்த குழந்தைக்கு வாங்கும் பிறந்த சான்றிதழோ
பள்ளியில் படித்துவிட்டு வாங்கும் உயர் வகுப்பு சான்றிதழோ
கணவன் மனைவி என ஆதாரமாக சொல்ல வாங்கும் திருமணச் சான்றிதழோ
அப்பா அம்மா என உரிமை கொண்டாட வைக்கும் வாரிசு சான்றிதழோ
கல்லூரியில் முடித்து வாங்கும் டிகிரி சான்றிதழோ!
இந்தியன் என சான்றிதழ் அளிக்கும் இருப்பிட சான்றிதழோ
இறந்த பின்னும் வாங்கவோண்டிய இறந்த சான்றிதழோ
இவை அனைத்திற்கும் கொடுக்கவேண்டிய பணத்தின் நண்பனான இலஞ்சமோ
இலஞ்சத்தின் காதலனான ஊழலோ
உண்ணும் உணவோ
உடுத்தும் உடையோ
உடல் நலனை சரி செய்ய மருந்தில் கலந்திருக்கும்
ஊழலின் சகோதரனான கலப்பிடமோ!
ஊழலை வாழ்க்கையாக வாழும் இந்த சமூகத்திலிருந்து தினமும் என்னால்
கண்மூடி தூங்க மட்டும் தான் முடிகிறது
கண் விழித்துப் பார்க்கிறேன் என்றாவது மாறாதென
இன்று உணர்ந்தும் விட்டேன்
கண்ணாடி முன் என்னால் சிரிக்கத் தான் முடியுமென!
வேடிக்கையாக சிரித்துக் கொண்டே
சிறகடிக்கும் என் எண்ணங்களை உடைத்து விடுகிறேன் இத்துடனே
நீங்களும் என்னோடு
உங்கள் எண்ணங்களை உடைத்தீர்களா என்று கேள்வியோடு
முடிக்கிறேன் இப்புள்ளியுடனே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக