தவழும் குழந்தையின் அழுகுரலோ
குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளின் கூக்குரலோ
பிள்ளையை படிக்க வைக்க
பள்ளிகளை தேடி திரியும் தந்தையின் கவலையோ!
பிள்ளை தோளுக்கு மேல் வளர்ந்தால் பெற்றோரை மதிப்பானா என்ற ஏக்கமோ!
திருமணமான பின்பு கடைசிகாலத்தில் கவனிப்பானா என்ற அன்னையின் எதிர்பார்ப்போ!
அன்பை எதிர்பார்க்கும் காதலோ
காதலி இல்லாமல் தவிக்கும் இளைஞனோ
கண்மூடித்தனமாக நம்பும் மனிதர்களோ
சில நேரங்களில்
அந்த மனிதர்களே நம் கண்முன்னே
ஏமாற்றி விடுவார்களோ என்ற பயமோ!
காதலனுக்கு தன் காதலி மீது உள்ள அக்கறையோ
அந்த அக்கறையே சண்டையாக மாறிவிடுமோ என்ற கலக்கமோ!
காதலிக்கு காதலன் மீது உள்ள பாசமோ
அந்த பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பானா என்று தவிப்போ!
வேலை இல்லாதவனுக்கு வேலை கிடைக்குமா என்ற ஏக்கமோ
வேலையில்ருப்பவனுக்கு வேறு ஏதாவது நிம்மதியான வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்போ!
குறைந்த ஊதியம் வாங்குபவனுக்கு இன்னும் கிடைக்குமா என்ற ஏக்கமோ
பணத்தை நோக்கி ஓடுபவனுக்கு
போதிய பணம் இருந்தும்
போதாது என்ற பேராசையோ!
பணம் வைத்திருப்பவனுக்கு நீதி விற்குமா என்ற ஏக்கமோ
பணமே இல்லாதவனுக்கு நீதி கிடைக்குமா என்ற கலக்கமோ!
ஒரு ஆணுக்கு தன் குடும்பத்தின் பொறுப்புகளினால் வருத்தமோ
ஒரு பெண்ணுக்கு அந்த ஆண் ஏற்படுத்தும் தடைகளினால் அடைய முடியாத ஆசைகளின் தவிப்போ!
நடுத்தர குடும்பத்தினருக்கு தன் சுமைகளை நோக்கிய கவலையோ!
நடுத்தெருவில் வசிப்பவனுக்கு அடுத்த வேலை உணவு கிடைக்குமா என்ற கவலையோ!
உணவே இல்லாத ஏழைக்கு
மூன்று வேளை உணவு கிடைக்குமா என்ற தவிப்போ
மூன்று வேளை உண்பவனுக்கு வீடு கட்ட முடியுமா என்ற ஆசையோ!
வீடே இல்லாதவனுக்கு கூரை வீடு மாளிகையோ!
எதுவும் இல்லாதவனுக்கு மரணமும் ஏக்கமோ!
ஆசைகளை ஏக்கமாகத் தேடிக் கொண்டு கிடைக்கும் சந்தோஷங்களை விட்டுவிடுகிறோம்
வாழ்கிறோம் அவசர உலகில்
பிறக்கிறோம் அழகாக
ஓடுகிறோம் வெற்றிக்காக
வாழ்கிறோம் வாழ்க்கையே மர்மங்களாக முடிவில் மடிகிறோமா ?
ஆறடி பள்ளத்திற்காக ?
கேள்விகளை உங்கள் முன் விட்டுவிடுகிறேன் பதிலை தேடிப் பாருங்கள்
உங்கள் மனதில் அம்புகளாக?
இந்த கவிதையை பாடல் போல் கேட்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக