பயணங்களின் தொடர்ச்சி - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

சனி, 21 ஜனவரி, 2023

பயணங்களின் தொடர்ச்சி

தோளில் பையும் கையிலே தீனியும்
வாயும் அசை போடாமல் இருக்குமோ
வாழ்க்கையின் பயணத்தின் இடையிலே 
ஒரு சிறு பயணமோ
எங்கேயோ போகும் பேருந்தின் 
சன்னலின் ஓரத்தில் அமர விருப்பமோ ஆனால் அந்தச் சன்னலுக்கு விருப்பமானவரை மட்டும் அனுமதிப்பதனால் வரும் ஏக்கமோ!
எல்லா இருக்கையும் ஜன்னலாக்க முடியாதா என்ற ஒரு சிலரின் நடக்காத ஆசையோ!


பயணத்திலே ஒரு சிலருக்கு பெரும் உறக்கமோ 
சிலருக்கு ஓடும் பேருந்தும் ஓடாதது போல் தோன்றுமோ!
பலருக்கு நகரும் தொடர்வண்டியும் நகராமல் ஊருமோ
சிலருக்கு வேடிக்கை பார்ப்பதில் தயக்கமோ
பலருக்கு வேடிக்கை பார்ப்பதுதான் விருப்பமோ
சிலருக்கு காதிற்கு இனிமையான பாடலின் 
கேட்பதால்  இனிமையோ
அதிலும் பலருக்கு பாடலோடு பாடுவது தான் இனிமையோ
சிலருக்கு பக்கத்தில் இருப்பவரிடம் பேசினால் இன்பமோ
பலருக்கு தன் கையில் உள்ள அலைபேசியில் பொழுதை கழிப்பது தான் இன்பமோ
சிலருக்கு சின்ன குழந்தைகளை ரசிப்பதில் ஆர்வமோ
அதில் ஒரு சிலருக்கு மட்டுமே சின்ன குழந்தையுடன் விளையாட விருப்பமோ

எப்பொழுதும் ஓடும் தொடர்வண்டியில் ஆறிப்போன பண்டமும் 
சூடாக இருப்பது போல்
 சுட சுட என பாடுவது போல்
 வியாபாரம் செய்யும் வியாபாரியின் இனிமையான குரலை கேட்க ஆவலோ!-இல்லை சில நேரங்களில் கடமுடவென்று பெறட்டும் வயிற்றை  சமாதானப்படுத்த
 ஏதாவது கிடைக்காத என்று வியாபாரியை தேடும் ஆவலோ!
ஏதோ சில நேரங்களில்
 வயிற்றைக் கலக்கும் சம்சாவோ 
அதை திருப்திப்படுத்த திருப்தியில்லாத பொதுக் கழிவறையில் மூக்கை முடிய அனுபவமோ!
பல நேரங்களில் வடக்கன்ஸ் தொல்லையோ சில நேரங்களில் சில்லறைக்காக நடத்துனரிடம் சண்டை போடுபவர்களால் தொல்லையோ

ஊருக்கு போகலாம் என்று பேருந்து கிடைக்காததால் தொல்லையோ-இல்லை பேருந்து கிடைத்தும் தூங்க முடியாது தான் தொல்லையோ!
சிலருக்கு பேருந்து இருக்கை கிடைக்காததால் வந்த அனுபவமோ
பலருக்கு வேறு வழி இல்லாததால் பேருந்தில் வர வேண்டிய அனுபவமோ

பேருந்தின் பயணத்தின் போது
 இரவாமல் ஒட்டிய ஓட்டுனர்
 இரவு வேளை உணவுக்காக
 இரவு 12:30 மணிக்கு மரண விலாஸ் உணவகத்திலே நிப்பாட்டிய அனுபவமோ!
அப்பாடா என்று சாப்பிட உட்கார்ந்தால் 
மட்டமான உணவும் ஐயோடா என்ற சுவையும் மாடர்ன் உணகத்தின் விலையால்
மணிப்பர்சை பார்த்து பயந்து அனுபவமோ!
இப்படி வாழ்க்கையின் பயணத்தின் இடையில்
நாம் பயணங்களின் அனுபவத்தை
 நமக்கே தெரியாமல் இரசிக்கிறோம்
பயணங்களில் தொடர்ச்சியாகவா
அனுபவங்களின் தொடர்ச்சியாகவா
Hear audio click Below 👇👇👇👇👇

1 கருத்து:

close