மரத்தின் இலைகளும் அசையும் காற்றும் தென்றலாக மாறும்
அந்த உணர்வை இரசிக்க செய்பவளும்
இவள் தான்
மேகங்கள் ஒன்றை ஒன்றி
கொஞ்சி விளையாடும்போது வரும்
சத்தத்தை கண்டு பயப்பட செய்பவளும்
இவள் தான்
அதனால் உண்டாகும் மின்னலை தருபவளும் இவள் தான்
கண்ணீரை பரிசாகத் தரும் மேகங்களின் இரைச்சலும்
மரத்தின் இலையின் மீது படும் மழைத்துளியின் சத்ததை தருபவளும் இவள் தான்
அமைதியை விரும்பும் கடலும்
அழகான கடலலைகளை தருபவளும்
இவள் தான்
ஓடும் நீரோடையும் கொட்டும் அருவியும்
தரும் அழகான பிரம்மாண்டத்தை
இரசிக்க காரணமானவளும் இவள் தான்
குழந்தை போல் சிரிக்கச் செய்பவளும் இவள் தான்
குழந்தைப் பருவத்தை நினைவூட்ட செய்தவளும் இவள் தான்
கவலையை நினைத்து அழுக வைப்பவளும் இவள் தான்
அந்தக் கவலைக்கு ஆறுதல் சொல்லுவதும் இவள் தான்
தனிமையில் கலங்கும் வேலையில் தனிமையை இரசிக்க வைப்பதும் இவள் தான்
வாழ்க்கையை இரசிக்க வைப்பதும் இவள் தான்
சில நேரங்களில் வாழ்க்கையை வெறுக்கச் செய்பவளும் பொன்னான இசை தான்
காதலை உணர வைப்பதும் இசை தான் அதனால் உண்டான வலியை ஆற்றுவதும் இசை தான்
மழலையின் குரலின் இனிமையும்
அந்த மழலையின் தூங்க வைக்கும் தாயின் தாலாட்டும் ஒர் இசை தான்
ஒரு காதலன் காதலியை பார்த்து பேசும் மௌனமும் இசைதான்
அந்த மௌனங்களில் கலந்து இருக்கும்
ஆயிரம் வார்த்தைகளும் இசை தான்
போக்குவரத்து நெரிசலில்
லாரியின் ஓட்டுனர் விதவிதமாக ஒலியை எழுப்புவதும் ஒரு இசை தான்
தெருக்களின் ஓரத்திலே தண்ணீருக்காக சண்டையிடும் பெண்மணியின் கத்தலும் ஒரு இசைதான்
பிடித்த உறவுகளுக்கு பிடிக்காமல் பிரியாவிடை கொடுக்கும் போது
ஏதோ ஒரு உணர்வை நம்மை ஆட்கொள்ள செய்வதும் இசை தான்
தவழும் குழந்தையின் அடிச்சு விடும்
தள்ளாடும் கிழவனின் சிரிப்பும்
இறுதி ஊர்வலத்தில் வரும் ஒப்பாரி அழுகையும் இசைதான்
இப்படி அழுகும் குழந்தையிலிருந்து
தள்ளாடும் முதியோர் வரை
நம்மை ஆட்டி வைப்பதும்
இந்த இசை இன்னும் குழந்தைதான்..
Hear this poem in Audio format click Below
👇👇👇👇👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக