வெயிலை கட்டியணைத்து
வியர்வைகளில் குளித்து
நண்பர்களோடு உறவாடிய நேரம் அது!
பசி வந்தால் கல்லை விட்டு மாங்காய் பரிச்சோம்
பக்கத்து வீட்டு தோட்டத்தில் எகிறி குதிச்சோம்
புளியமரத்தின் புளியங்காய்யை
உப்பில் சமச்சோம்
வேப்பமரத்தின் கொட்டை வச்சு வந்த இரத்தம் இரசிச்சோம்
ஈக்கி வைச்சி தட்டான் அடிச்சு புடித்தோம்
ஈரமண்ணு வாசனைக்கு எங்களை மறந்தோம்
கோலிக்குண்டு விளையாண்டு பலகோலி தொலைச்சோம்
பம்பரத்தில் ஆணிவைச்சு பல பம்பரம் உடைச்சோம்
பச்சைகுதிரை விளையாண்டு அடுத்தவன் முதுகை உடைச்சோம்
பச்சைமட்டை தென்னை வைச்சு கிரிக்கெட்பந்தை அடிச்சோம்,
கிண்டிகம்பு ஆடி அடுத்தவன் மண்டைய உடைச்சோம்
காட்டுக்கு போகையில காஞ்ச குச்சியை பாம்புன்னு பயம்புரூத்தி சிரிச்சோம்
மண்ணில் காந்தம் தேச்சு
மக்கிபோன பேப்பரிலும் பேய்ஆட்டம் காட்டினோம்
ஜெட்லி போல மாற ஆசைபட்டு
பல்டி அடிக்க முயற்சிசெய்து
தலையை தானே மண்ணில் நாங்க புதைச்சோம்
தண்டவாள மேல் காசு வைச்சு நசுக்கி இரசிச்சோம்
சாயங்காலம் நேரத்தில் காதில் பேர்சொல்லி
மொத்தமா கண்ணைமூடி நொல்லியே
சில நேரம் தொலைச்சோம்
பனை மரத்தின் நொங்குக்கு நாக்கை தொலைச்சோம்
பணங்காய சுட்டு பல்லு தேச்சு சிரிச்சோம்
எப்பாயாவது விற்கும் சேமியா ஐஸ்ஸுக்கு
எங்களையே மறந்தோம்
கையில் கட்டும் ஜவ்வு மிட்டாய் வாங்க துல்லிகுதிச்சோம்
சைக்கிள் டையரை கையிலே ஓட்டியே
பறவையாக மாறிதிரிந்தோம்
ஓட்டையான காசு புதைச்சு தேடிஅலைஞ்சோம்
ஓட்டையான பானையில் சமைச்சு ரூசிச்சோம்
ஓடாத ஆண்டனாவை ஆட்டிஅசைத்து
வெள்ளிகிழமையில ஓடும் ஒலியும் ஒலியுக்கு
கூட்டாம உட்காந்து வாயப்பொளந்தோம்
இப்படி ஓயாத நினைவுகளை ஏக்கத்துடன்
எண்ணி பார்க்கிறேன் ஓரமாக உட்காந்து
எண்ணை நானே மறக்கிறேன்
அங்கே விளையாடும் குழந்தையை பார்த்து
மீண்டும் வாழ ஆசைப்படுகிறேன் ஒரு 90 ஸ் கிட்ஸாக.....
For hear audio pls click Below audio and enjoy Tamilvoice over 👇👇👇👇👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக