Hear the poem line in audio format 👇👇👇👇👇👇
நொடிகளும் சில நேரம் கனமாகும்
கடக்கும் நிமிடங்களும் நரகமாகும்
கண்களில் சில நேரம் கண்ணீரும் ஆறாய் ஓடும்
கன்னங்களும் வாடிய அத்தியாய் மாறும்
நண்பர்களும் அருகிலிருந்தும்
சில நேரங்களில் வெறுப்பை கக்கும்
மனமும் வெறுமையாக மாறும் தருணமும்
தேடும் நபர்கள் பேசவில்லையெனில்
உலகமே வெறுமையாக தெரியும் நேரங்களும்,
ஏமாந்த நெஞ்சமும் ,
நொறுங்கிய உள்ளத்திற்கு
உலகமே இருண்டதாக தோன்றும்
பல தருணங்களும் தருபவள் இவள் தான் !
யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று தேடும் வேளையில்
கண்ணீரை பரிசாகத் தந்து
ஆறுதல் தருபவளும் இவள் தான்
யாரிடமும் பேசாமல் அமைதியாக
மாற்றச் செய்பவளும் இவள் தான்
காதல் தோல்வியால் கலங்கியிருப்பவர்களை கட்டியணைப்பவளும் இவள் தான்
உறவுகளை இழந்த பின்
உள்ளத்தில் வரும்
ஆயிரம் கேள்விகளுக்கு காரணமானவளும் இவள் தான்!
நம்பிக்கையானவர்கள் நம்பிக்கை துரோகம் செய்யும் போது வரும் துன்பத்தை தாங்க துணையாய் இருப்பவளும் இவள் தான்!
மன அழுத்தத்தில் இருக்கும் போது
மனதை சிந்திக்க வைப்பதும் இவள் தான்
சிலருக்கு பேச நண்பர்களே என்றாலும் நண்பனாக என்றும் கூடவே இருப்பவனும் இவள் தான்!
அமைதியைக் கண்ட பலருக்கும்
ஞானத்தை அடைந்த சிலருக்கும்
உலகைப் புரிந்து அறிஞர்களுக்கும்
பரிசாக இருப்பவளும் இவள் தான்!
பிறரிடம் பிச்சை கேட்பவர்களுக்கும்
பிறருக்கு உதவாமல் தான் என அகங்காரம் கொண்டவர்களுக்கும்
சுயநலம் உடையவர்களுக்கும்
பேராசை கொண்டவர்களுக்கும்
நெஞ்சில் ஒன்றை வைத்து
மற்றவர்களைப் பற்றி பிறரிடம்
தப்பாக பேசுபவர்களுக்கும்
வன்மம் கக்குபவர்களுக்கும்
இறுதியில் தண்டனை தருபவளும் இவள் தான்
வாழ்க்கையில் அதிகம் தோல்வியை கண்டவர்களுக்கும்
வாழ்க்கையே வெறுத்தவர்களுக்கும்
வாழ்வே தேவையில்லை என்பவர்களுக்கும் ஆறுதலாக இருப்பவளும் இவள் தான்!
தேன்யிருக்கும் மலரை வட்டமிடும் வண்டும்
அந்த வண்டும் வாடிய மலரை தேடுவதில்லை ஆனால் அந்த மலர்
தன் உயிரை மாய்த்துக் கொள்கிறது தனிமையின் கொடுமையால்!
அதுபோல் சிலரும் மாய்த்துக் கொள்கின்றனர் தன் உயிரை ......?
காரணம் வாழ்க்கையை எதிர்கொள்ள தெரியாமலில்லை
அதற்கும் காரணம் இவள் தான்!
சிலருக்கு இவள் இனிமை!
சிலருக்கு இவள் நண்பன்;
பலருக்கு இவள் கொடுமை!
சிலருக்கு இவள் ஒரு அனுபவம்!
பலருக்கு இவள் அமைதி!
பலருக்கு இவளே உடன்வருவாள் முடிவில்
ஆறடி பள்ளமாக
நிலவைப் பார்த்து ஏங்கும் பூமியாக
சூரியனைப் பார்த்து ஏங்கும் கோள்களாக
விண்மீன் பார்த்து ஏங்கும் வானமாக
மேகத்தைப் பார்த்து ஏங்கும் செடியாக
தென்றலை பார்த்து ஏங்கும் மூங்கிலாக,
விடியலை பார்த்து ஏங்கும் சேவலாக
பகலில் பார்த்து ஏங்கும் இரவாக
கடலைப் பார்த்து ஏங்கும் அலையாக
சில நேரங்களில் நான் அவளுக்காக ஏங்குகிறேன்..!
அவள் தான் என் இனிய தனிமையோ! இல்லை என்னை வாட்டும் கொடுமையோ!
Hear the poem in audio👇👇👇👇
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக